பிரித்தானியாவிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள்: விசா காலாவதியான வெளிநாட்டு மாணவர்களுக்கு எச்சரிக்கை
விசா காலாவதியான பின் புகலிடம் கோரும் சர்வதேச மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக பிரித்தானிய உள்துறைச் செயலர் எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள்
பிரித்தானியாவுக்கு கல்வி கற்க வரும் மாணவர்களில் 15,000 பேர் வரை, கல்வி கற்றபின், தங்கள் நாடுகளில் பாதகமாக சூழல் இல்லை என்றால் கூட பிரித்தானியாவில் புகலிடம் கோருவதாகத் தெரிவித்துள்ளார் பிரித்தானிய உள்துறைச் செயலரான Yvette Cooper.
பிரித்தானியாவின் புகலிடக்கோரிக்கை அமைப்பில் பெரிய அளவில் மாற்றம் செய்ய அரசு திட்டமிட்டு வருவது தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார் பிரித்தானிய உள்துறைச் செயலரான Yvette Cooper.

பெண்கள் மீதான அத்துமீறலுக்கும் புலம்பெயர்தலுக்கும் முடிச்சு போடாதீர்கள்: பிரித்தானிய பெண் பிரபலங்கள் கடிதம்
அதைத் தொடர்ந்து இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவர், புகலிடக்கோரிக்கை அமைப்பில் செய்யப்பட இருக்கும் மாற்றங்கள் குறித்து விவரித்தார்.
அந்த நடவடிக்கைகளின்படி, தங்கள் விசா காலாவதியானபின் பிரித்தானியாவில் தங்கும் சர்வதேச மாணவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என பிரித்தானிய அரசு எச்சரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |