சமூக ஊடக நிறுவனங்களுக்கு பிரித்தானிய அரசு கடும் எச்சரிக்கை
பிரித்தானிய அரசு, குழந்தைகளை பாதுகாக்கும் அல்கோரிதங்களை நிரூபிக்க தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக ஊடக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியாவின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான Ofcom, YouTube, Facebook, Roblox போன்ற முக்கிய சமூக ஊடக நிறுவனங்களுக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இணைய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், இவை தங்களது அல்கோரிதங்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களிலிருந்து பாதுகாக்கும் என்பதை நிரூபிக்க வேண்டும்.
தவறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என Ofcom தலைமை நிர்வாக அதிகாரி மெலனி டாவ்ஸ் (Melanie Dawes) தெரிவித்துள்ளார்.

அல்கோரிதம்கள் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கான உள்ளடக்கங்களை பரிந்துரைப்பது குறித்து Ofcom கவலை தெரிவித்துள்ளது.
மேலும், குழந்தைகள் தனிப்பட்ட செய்திகளை பெற முடியாதவாறு பாதுகாப்பு அமைப்புகள் உள்ளனவா என்பதையும் Ofcom ஆராய்கிறது.
இணைய பாதுகாப்பு சட்டத்தின் ஒரு பகுதியாக, Ofcom சமூக ஊடக நிறுவனங்களின் பரிந்துரை அமைப்புகளை “அல்கோரிதம்கள் ஆய்வு” செய்ய உத்தரவிடும் அதிகாரம் பெற்றுள்ளது.
2025 ஜூலை மாதம் முதல், பெரியவர்களுக்கான உள்ளடக்கங்களை குழந்தைகள் அணுக முடியாதவாறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, 12-க்கும் மேற்பட்ட ஆபத்தான இணையதளங்கள் பிரித்தானியாவில் முடக்கப்பட்டுள்ளன, இதில் போர்னோ மற்றும் தற்கொலை தொடர்பான தளங்களும் அடங்கும்.
Ofcom இந்த முயற்சியை “நல்ல தொடக்கம்” எனக் கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Online Safety Act, Ofcom child protection, social media algorithms, YouTube Facebook regulation, harmful content online, algorithmic audits UK, anti-grooming measures, age verification systems, UK tech law enforcement, children safety internet