UK weather: இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை., கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிக்கலாம்
பிரித்தானியாவில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பெரும்பகுதிகளுக்கு பனிப்பொழிவுக்கான மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கடும் பனிப்பொழிவு வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை காலை வரை சில இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் என்று பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் ரயில் மற்றும் விமானங்கள் தாமதமாகலாம் அல்லது ரத்து செய்யப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடும் பனி காரணமாக சாலைகளில் பயண தாமதங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிகை வெளியாகியுள்ளது.
UK Met Office
இதனால் சில கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழன் அன்று வடக்கு நோக்கி பனிப்பொழிவு மற்றும் கடும் பனிப்பொழிவு இருக்கலாம் என்றும், இது, கீழ் மட்டங்களில் இருக்கும் பகுதிகளில் 2 செ.மீ பனியையும், 200 மீட்டருக்கு மேல் தரையில் இருக்கும் பகுதிகளில் 2-5 செ.மீ, மற்றும் 400 மீட்டருக்கு மேல் இருக்கும் பகுதிகளில் 10-20 செ.மீ வரை பனியைக் கொண்டு வரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. .
பகலில் பனி குறையும், மேலும் மழை அல்லது தூறல் மழையாக மாறும், குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கில் மழை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு எல்லை குறித்து சில நிச்சயமற்ற தன்மை இருப்பதாகவும், வரும் நாட்களில் நிலைமை மாறக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த எச்சரிக்கை வியாழக்கிழமை அதிகாலை 3 மணி முதல் 24 மணிநேரத்திற்கு அமுலில் இருக்கும்.
ஸ்காட்லாந்தில் இந்த மஞ்சள் வானிலை எச்சரிக்கை தொடர்ந்து திங்கட்கிழமை இரவு 9 மணி வரை இருக்கும், 170 மிமீ மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் காலை 9 மணி வரை வடக்கு ஸ்காட்லாந்தில் பனி உறைவதற்கு மஞ்சள் எச்சரிக்கையும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
UK weather, Snow, yellow warning for England and Wales, UK Snow, England Snow, UK Met Office, United Kingdom Weather, UK Yellow alert