பிரித்தானியாவுக்கு இரண்டு நாட்களுக்கு புயல் எச்சரிக்கை
பிரித்தானியாவில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதல் எச்சரிக்கை
வெள்ளிக்கிழமை மதியம் 12.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை மேற்கு, மத்திய, தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு இங்கிலாந்து, Cardiff மற்றும் Swansea உட்பட வேல்ஸ் நாட்டின் மேற்கு பகுதிகளுக்கு முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயலின்போது தாக்கும் மின்னல் காரணமாக கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படலாம் என பிரித்தானியா வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
மூன்று மணி நேரத்தில் 40 மில்லிமீற்றர் வரை மழை பொழியக்கூடும் என்றும், மழை, பெருவெள்ளம் மற்றும் ஆலங்கட்டி மழையால் வாகனங்களில் பயணித்தல் பாதிக்கப்படலாம் என்றும் மின்வெட்டுகளும், ரயில் போக்குவரத்தில் தாமதங்களும் ஏற்படலாம் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது எச்சரிக்கை
சனிக்கிழமை அதிகாலை 1.00 மணி முதல் நள்ளிரவு வரை, 23 மணி நேரத்துக்கு, வேல்ஸ் முழுமையும், லிவர்பூல், Stoke-on-Trent, Leicester மற்றும் Cornwall முழுவதற்குமாக இரண்டாவது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயலின்போது, இடியுடன் கூடிய மழை, கன மழை ஆகியவற்றால் இடையூறு ஏற்படலாம் என்றும், ஆலங்கட்டி மழையும், மின்னலும் மத்திய, தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளை தாக்கக்கூடும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வேகமாகப் பாயும் பெருவெள்ளம் மற்றும் ஆழமான பெருவெள்ளத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் சிறிது வாய்ப்புள்ளது என்றும், பெருவெள்ளம் காரணமாக சில சாலைகள் துண்டிக்கப்படலாம் என்றும், மின்வெட்டுக்களும், ரயில் மற்றும் பேரூந்து சேவைகளில் ரத்து மற்றும் தாமதமும் ஏற்படலாம் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |