பிரித்தானியாவிற்கு புயல் எச்சரிக்கை: பள்ளிகள் மூடல், பயணங்களை தவிர்க்குமாறு எச்சரிக்கை
பிரித்தானியாவில் பல்வேறு பகுதிகளில் பியா புயல் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை
பிரித்தானியாவில் முழுவதும் பியா புயல் காரணமாக மஞ்சள் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் புயல் எச்சரிக்கையானது நள்ளிரவு முதல் வியாழக்கிழமை இரவு 9 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
பியா புயல் காரணமாக ஸ்காட்லாந்தின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் 70 முதல் 80 mph வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மற்ற உயரமான எச்சரிக்கை விடப்பட்ட வடக்கு பகுதிகளில் 65 முதல் 70 mph வேகத்தில் காற்று வீசக்கூடும்.
பிற இடங்களில் 45 முதல் 55 mph வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பியா புயல் எச்சரிக்கையானது, பெல்ஃபாஸ்ட்,( Belfast) நியூகேஸில் அபான் டைன்(Newcastle upon Tyne) மற்றும் மான்செஸ்டர்(Manchester) ஆகிய இடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்
பியா புயல் எச்சரிக்கை காரணமாக பள்ளிகளை மூடப்பட்டுள்ளது.
weather warning covers Scotland and North England. Pic: Met Office
மேலும் பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, தவிர்க்க முடியாத பயணங்களாக இருப்பின், மெதுவாக வாகனங்களில் பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் புயலின் போது மின்வெட்டு ஏற்பட்டால் அதை சீர்ப்படுத்த ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Storm Pia, northern Scotland, yellow weather warning, forecast,