மேற்கு லண்டனில் தீ விபத்து: தீயை அணைக்க போராடும் 125 தீயணைப்பு வீரர்கள்
லண்டனில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பற்றிய தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு 125 தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர்.
லண்டனில் தீ விபத்து
பிரித்தானியாவில் மேற்கு லண்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 125 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
லண்டனின் லெம்ப்லியில்(Wembley) உள்ள எல்ம் சாலையில்(Elm Road) ஏற்பட்ட இந்த தீயை அணைக்க இன்று பிற்பகல் 20 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
Harrow Online
கட்டிடத்தின் மாடியில் தீ பற்றி இருப்பதாக லண்டன் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் சம்பவ இடத்தை சுற்றியுள்ள கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக சம்பவ இடத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு லண்டன் தீயணைப்பு துறை அறிவித்துள்ளது.
தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் உறுதி செய்யப்படாத நிலையில், இது தொடர்பான விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

உலக பணக்காரர் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடம்: ரூ.25,000 கோடியை 27 நாளில் இழந்த எலான் மஸ்க்
Google Street View
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |