வில்ட்ஷயரில் அரங்கேறிய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி: குற்றவாளிக்கு உதவிய இருவர் கைது
பிரித்தானியாவின் வில்ட்ஷயர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிராவலர் தளத்தில் துப்பாக்கிச்சூடு
ஞாயிற்றுக்கிழமை காலை பிரித்தானியாவின் வில்ட்ஷயர் (Wiltshire) பகுதியில் உள்ள டிராவலர் தளத்தில்(Traveller site) அரங்கேறிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 30 வயதுடைய நபர் கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு தாக்குதல் தொடர்பாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு தேவையான மருத்துவ உதவிகளை செய்தனர்.
இருப்பினும் துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட பலத்த காயத்தால் பாதிக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

இருவர் கைது
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களான 70வது வயதுடைய நபர் மற்றும் 40 வயதுடைய பெண் ஒருவர் என இரண்டு பேர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது, துப்பாக்கி வைத்திருந்தல், குற்றவாளிக்கு உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் தற்போது அவர்களிடம் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக துப்பறிவாளர்கள் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
வில்ட்ஷயரின் டிராவலர் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தேகத்திற்குரிய நடமாட்டம் இருந்ததை யாரும் கண்டிருந்தால் அல்லது துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்து இருந்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு காவல் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |