பிரித்தானியாவில் முகத்தில் உடைந்த கண்ணாடியை கொண்டு பலமுறை குத்திய நபர்: சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்
பிரித்தானியாவில் இளம் வயது தாயான பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்தை எதிர்கொண்டுள்ள நபர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
இளம் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்
பிரித்தானியாவின் கிளாஸ்கோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஆகஸ்ட் 26ம் திகதியன்று 23 வயதான பிராடி மேக்கிரிகோரின் (Brodie MacGregor) என்ற பெண்ணை 52 வயதான அலெக்சாண்டர் பிரென்னன் (Alexander Brennan) என்ற நபர் உடைந்த கண்ணாடி பாட்டில்களை கொண்டு பயங்கரமாக தாக்கியுள்ளார்.
உடைந்த கண்ணாடியை கொண்டு முகம், கழுத்து, தலை மற்றும் உடல் பாகங்களில் பலமுறை தாக்கியதால் பிராடி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து பிராடி சம்பவ நடந்த அன்று Elmvale தெருவில் உள்ள வீட்டில் 10:15 மணியளவில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளி
இதையடுத்து கைது செய்யப்பட்ட Stenhousemuir பகுதியை சேர்ந்த சந்தேக நபரான அலெக்சாண்டர் பிரென்னன் கொலை குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
அலெக்சாண்டர் பிரென்னன் கிளாஸ்கோ ஷெரீப் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது எத்தகைய வேண்டுகோளையும் முறையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 8 நாட்களுக்கு பிறகு அவர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |