பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் ஈவ்வில் பயங்கரம்: பலர் காயம் பெண் ஒருவர் பலி
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் ஈவ் தினத்தன்று பப் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் ஈவ்வில் துப்பாக்கி சூடு
பிரித்தானியாவின் விர்ரலின்(Wirral) உள்ள வாலேசி (Wallasey)கிராமத்தில் இருக்கும் லைட் ஹவுஸ் விடுதியில் நேற்று இரவு பயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
இரவு 11.50 மணிக்கு பிறகு நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பெண் ஒருவரும், மூன்று ஆண்களும் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Sky News
ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்து விட்டதாகவும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் காயமடைந்து இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
வாலசே கிராமத்தில் உள்ள லைட் ஹவுஸ் விடுதியில் நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பேசிய துப்பறியும் கண்காணிப்பாளர் டேவ் மெக்காக்ரியன் , "விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது, இது உண்மையிலேயே அதிர்ச்சியூட்டும் மற்றும் பேரழிவு தரும் சம்பவம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், இது கிறிஸ்துமஸ் தினத்திற்கு சற்று முன்பு இளைஞர்கள் நிறைந்த ஒரு பரபரப்பான இடத்தில் நடந்துள்ளது."
Darrell Evans
“துப்பாக்கி சூடு நடந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, துப்பாக்கி ஏந்தியவர் ஒருவர் அடர் வண்ண மெர்சிடிஸ் வாகனத்தில் பப் கார் நிறுத்துமிடத்தை விட்டு வெளியேறியதாக நாங்கள் நம்புகிறோம், இதை பார்த்தவர்கள் உடனடியாக எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்”.
அத்துடன் அதிகாரிகள் சாட்சிகளிடம் விசாரணை செய்து வருவதுடன் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர் என்று தகவல் தெரிவித்துள்ளார்.