பிரித்தானியாவில் செல்லப்பிராணி நாய் உரிமையாளரின் உடலை உண்ட சோகம்! ஸ்விண்டனில் அதிர்ச்சி
பிரித்தானியாவில் பெண் ஒருவர் இறந்த 1 மாதத்திற்கு பிறகு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட பெண்
பிரித்தானியாவின் ஸ்விண்டன் நகரில் 45 வயது ஹார்ட் என்ற பெண் அவரது வீட்டில் கிட்டதட்ட 1 மாதத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்வம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் உயிரிழந்த பெண்ணின் செல்லப்பிராணி நாய் அவரது உடலின் சில பகுதிகளை உட்கொண்டிருந்தததும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண் 1 மாத காலமாக காணாமல் போயிருந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் அளித்த புகாரின் பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
என்ன நடந்தது?
ஹார்ட்டின் செல்லப்பிராணி நாய் தொடர்ந்து குரைத்ததால் சந்தேகத்தின் பேரில் அண்டை வீட்டுக்காரரான லொரெய்ன், மாற்று சாவியை பயன்படுத்தி ஹார்ட்டின் வீட்டிற்கு செல்ல முயற்சித்துள்ளார்.
ஆனால் கதவு உட்புறம் பூட்டப்பட்டு இருந்ததால், லொரெய்னால் உள்ளே செல்ல முடியவில்லை, இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், வீட்டின் உள்ளே சென்ற போது வரவேற்பறையில் ஹார்ட் சடலமாக உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன் அவரது இரண்டு வளர்ப்பு டாக்ஷண்ட் நாய்களில் ஒன்று இறந்து கிடந்ததோடு. மற்றொரு நாய் மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளது.
ஹார்ட்டின் தனிப்பட்ட வாழ்க்கை
ஹார்ட், மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்ததாகவும், சமீபத்தில் நீண்ட கால காதலரிடம் இருந்து பிரிந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த திடுக்கிடும் கண்டுபிடிப்பை தொடர்ந்து அவரது மகன் சமூக ஊடகங்களில் ஜனவரி 29 ஆம் திகதி அவரது தாயார் இறந்ததை உறுதிப்படுத்தினார்.
காவல்துறை விசாரணை
காவல்துறை விசாரணையில் ஹார்ட் இறந்த பிறகு அவரது நாய்கள் அவரது உடலை உண்ணத் தொடங்கியதாக தெரியவந்துள்ளது.
ஆதாரங்களின்படி, ஹார்ட் தானே தன் உயிரை மாய்த்துக் கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த இறப்பு சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என்று சட்ட அமலாக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |