500 கோடி பரிசு விழுந்த லொட்டரி சீட்டை குப்பையில் வீசிய கடைக்காரர்- அதிர்ஷ்டத்தை இழக்கவிருக்கும் பிரித்தானிய பெண்

Lottery
By Ragavan Jul 11, 2026 08:29 AM GMT
Report

பிரித்தானியாவில் பெண்ணொருவர் தனது லொட்டரிச் சீட்டிற்கு சுமார் ரூ.500 கோடி பரிசு விழுந்தும், அதிர்ஷ்டத்தை இழக்கவுள்ளார்.

இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த காத் மெயின் (Kath Main) என்ற 46 வயது பெண், தனது வாழ்க்கையை மாற்றக்கூடிய 12 மில்லியன் பவுண்ட் (இலங்கை பணமதிப்பில் ரூ.540 கோடி) லொட்டரி பரிசை இழக்கும் நிலையில் உள்ளார்.

காரணம், அவர் வாங்கிய லொட்டரி சீட்டை அந்தக் கடைக்காரர் தவறுதலாக குப்பையில் போட்டுவிட்டார்.

காத், கடந்த 20 ஆண்டுகளாக ஒரே ஆறு எண்களில் தொடர்ந்து லொட்டரி சீட்டை வாங்கி வந்தார்.

UK Woman May Lose Rs 150 Crore Lottery Jackpot

பொதுவாக அவரது தாயாரே சீட்டை வாங்குவார். ஜூன் 6-ஆம் திகதி நடந்த லொட்டரி டிராவில் பெரிய பரிசு வென்ற சீட்டு இன்னும் பெறப்படவில்லை என்ற செய்தியை பார்த்தபோது தான், காத் தனது எண்கள் வெற்றி பெற்றிருப்பதை உணர்ந்தார். அவர் தாயாரிடம் கேட்டபோது, “சீட்டை சரிபார்த்தேன், வெற்றிபெறவில்லை” என்று கூறியுள்ளார்.

ஆனால் காத், “இல்லை நாம் வாங்கிய சீட்டு வெற்றி பெற்றது, 12 மில்லியன் பவுண்டு” என்று உறுதியாகச் சொன்னார். அதற்கு தாயார், “சீட்டை கடை உரிமையாளர் குப்பையில் போட்டுவிட்டார்” என்று பதிலளித்தார்.

பிரித்தானியாவில் பரவும் அரிதான ஸ்கேபிஸ் நோய்- மருத்துவர்கள் எச்சரிக்கை

பிரித்தானியாவில் பரவும் அரிதான ஸ்கேபிஸ் நோய்- மருத்துவர்கள் எச்சரிக்கை

கடை உரிமையாளர் கரண் குமார், “சீட்டை ஸ்கேன் செய்த இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை. அதனால் வெற்றி எண் காட்டப்படவில்லை” என்று கூறியுள்ளார். National Lottery ஆப்பரேட்டரான Allwyn தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

பொதுவாக, லொட்டரி சீட்டை இழந்தாலும், திருடப்பட்டாலும், அழிந்தாலும், உரிய சான்றுகள் இருந்தால் பரிசு வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காத், “இந்த 30 நாட்கள் காத்திருப்பு மிகவும் கடினமாக உள்ளது. வெற்றி உறுதி ஆனால், முதலில் நியூசிலாந்து பயணம் செய்து 2029-ல் நடைபெறும் பிரிட்டிஷ் & ஐரிஷ் லயன்ஸ் சுற்றுப்போட்டியை பார்க்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த அதிர்ஷடம் அவரை வந்து சேருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

ஜேர்மனியில் சர்ச்சைக்குரிய சுகாதாரச் சட்டம் நிறைவேற்றம்- மக்கள் எதிர்ப்பு

ஜேர்மனியில் சர்ச்சைக்குரிய சுகாதாரச் சட்டம் நிறைவேற்றம்- மக்கள் எதிர்ப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US