பிரித்தானியாவில் வீட்டிலிருந்து காணாமல் போன பெண்: ஒரு வாரத்திற்கு பிறகு கிடைத்த அதிர்ச்சி செய்தி!
பிரித்தானியாவில் காணாமல் போய் தேடப்பட்டு வந்த பெண்ணின் உடல் ஒரு வார காலத்திற்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன பெண்
பிரித்தானியாவின் போண்டிப்ரிட்(Pontypridd) பகுதியை சேர்ந்த ஜோன் ஜோன்ஸ்(Joanne Jones) என்ற 49 வயது பெண் அவரது வீட்டில் இருந்து திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளார்.
இதையடுத்து அவரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் பணியை சவுத் வேல்ஸ் பொலிஸார் முடுக்கி விட்டு இருந்த நிலையில், சனிக்கிழமை மாலை அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் முறைப்படி அடையாளப்படுத்தபட்டதை அடுத்து, அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல் ஆய்வாளர் எம்மா ஹாம்ப்டன் பேசிய போது, ஜோன் ஜோன்ஸை இழந்துள்ள குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
1000 டன் வெடிக்கும் பொருள்..!ரஷ்யாவின் மிதக்கும் வெடிகுண்டு பிரித்தானிய துறைமுகத்தில் நிறுத்தி வைப்பு
மேலும் ஜோன் ஜோன்ஸின் மரணத்தில் சந்தேகத்திற்குரிய விஷயங்கள் எதுவுமில்லை என உறுதிப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |