தாய்லாந்தில் கவிழ்ந்த சுற்றுலா படகு: காணாமல் போன பிரித்தானிய பெண்
தாய்லாந்தில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் பிரித்தானிய பெண் ஒருவர் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன பிரித்தானிய பெண்
தாய்லாந்து தீவில் ஆழ்கடல் நீச்சல்(scuba diving) சுற்றுலா படகானது அந்தமான் கடல் பகுதியில் கவிழ்ந்த விபத்தில் சிக்கிய பிரித்தானிய பெண் ஒருவர் காணாமல் போய் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரித்தானியாவின் பிரைட்டனைச் (Brighton) சேர்ந்த 57 வயது மில்லி யங்(Millie Young) என்ற பெண்ணுடன், படகு குழுவை சேர்ந்த தாய்லாந்து பெண் ஒருவரும் காணாமல் போய் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
ViralPress
சவான் டூர் என்ற நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்த நிலையில், இதில் 18 பேர் வரை பயணம் செய்துள்ளனர். 16 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் காணாமல் போன பிரித்தானியரின் குடும்பத்திற்கு ஆதரவு வழங்கி வருவதாக வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
மீட்பு பணி
ரெக்கே குயின்(Reggae Queen) என்ற படகில் இருந்து காணாமல் போன இருவரும் 111 கி மீ வரை உள்ள வலுவான நீரோட்டத்தில் அழைத்து செல்லப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.
ViralPress
இந்நிலையில் காணாமல் போன இரண்டு நபர்களையும் கண்டுபிடிப்பதற்காக படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Reggae Queen, Thailand, British woman, Millie Young, Ko Torinla island,Sawan Tour company,