திருமணக் கோலத்தில் மாரத்தான் ஓடிய பிரித்தானிய பெண்: மறக்க முடியாத காதல் நினைவு
பிரித்தானியாவைச்ச சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவனின் நினைவாக திருமணக் கோலத்தில் மாரத்தான் ஓடியுள்ளார்.
இங்கிலாந்தின் லின்கன்ஷையரில் உள்ள லோரா கோல்மன்-டே (Laura Coleman-Day) என்பவர், தனது மறைந்த கணவரின் நினைவாக திருமண உடையுடன் லண்டன் மாரத்தானை ஓடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இது அவரது 13-வது மாரத்தான் ஓட்டமாகும்.
2024-ஆம் ஆண்டு, லோராவின் கணவர் சாண்டர், அக்யூட் லிம்பொபிளாஸ்டிக் லீூகீமியா எனும் அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட சிக்கலால் உயிரிழந்தார்.
அவரது நினைவாகவும், லியூகீமியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக பணம் திரட்டவும், லோரா இந்த மாரத்தானில் பங்கேற்றார்.
சாண்டருடன் 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட லோரா, அவருடைய ஆறாவது திருமண ஆண்டு நாளான அன்று, 26.2 மைல் மாரத்தானின் 23வது மைலில் ஓட்டத்தை நிறுத்தி, திருமண உடையை அணிந்து மீண்டும் ஓட்டத்தை தொடர்ந்தார்.
"இந்த நாளையும், என் கணவரையும் நினைவுகூர இதைவிட சிறந்த வழி வேறு ஒன்றில்லை" என்று லோரா கூறியுள்ளார்.
அவருடன் கெர்ன்ஸியிலிருந்து வந்த தோழி கேட் வால்ஃபோர்டும் ஓடியுள்ளார். இவரது நண்பரும் லியூகீமியாவால் 2018-இல் உயிரிழந்துள்ளார். இருவரும் Anthony Nolan எனும் ரத்தம் மற்றும் ஸ்டெம் செல்கள் தொடர்பான தொண்டு நிறுவனத்துக்காக நிதி திரட்டும் முயற்சியில் உள்ளனர்.
"சூடாக இருந்தாலும், அந்த உடையுடன் ஓட்டத்தை முடித்தது மிகவும் விசேஷமான அனுபவம்," என லோரா கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
London Marathon 2025, UK woman wedding dress marathon, Laura Coleman-Day husband tribute, Marathon for leukemia awareness, Anthony Nolan charity run, Wedding gown marathon run, Leukemia awareness UK news, Emotional marathon story, Viral UK marathon runner, Tribute to late husband marathon