இளவரசி கேட் அனுபவித்த அதே உடல்நல கோளாறு., கர்ப்பிணிப்பெண் விபரீத முடிவு
பிரித்தானியாவில் கர்ப்ப கால உடலநலக் கோளாறால் இளம் பென் ஒருவர் வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே கர்ப்ப கால உடலநலப் பிரச்சினையை (HG) பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் (Kate Middleton) எதிர்கொண்டுள்ளார்.
ஆனால், 26 வயதான ஜெஸ் க்ரான்ஷா (Jess Cronshaw,) என்ற இளம் பெண், அதிகப்படியான கர்ப்ப கால வாந்தி மற்றும் மயக்கம் (Hyperemesis Gravidarum - HG) நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான உதவிகள் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
HG என்ன? அதன் தாக்கம்
HG என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஒரு தீவிர நோய். இது அதிக வாந்தி, உடல் எடை குறைவு, நீர்ச் சுருக்கம் போன்ற உடல் சிக்கல்களை ஏற்படுத்தும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட முடியாமல், உடல் வலுவிழக்க நேரிடும். சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுவர்.
உதவியற்ற நிலையில் கர்ப்பிணிப் பெண்
ஜெஸ் தனது கர்ப்பத்தின் 28-வது வாரத்தில் இந்த நோயால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
மகளின் நிலைமை மிக மோசமாக இருந்ததை நினைவுகூர்ந்த அவரது தாயார் சுசன் க்ரான்ஷா, "அவள் உடல் நிறம் வெண்மையாகி, எடை மிகவும் குறைந்து, உணவோ, தண்ணீரோ குடிக்க முடியாமல் போனது," என வருந்தினார்.
ஜெஸ், தன் தோழியிடம் பகிர்ந்த ஒரு ஆடியோ பதிவில், “நான் இப்போது சந்திக்கின்ற மிகக் கடினமான தருணம் இதுவே. இந்த வாந்தி, மயக்கம் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது. நான் முழு நாளும் படுக்கையிலேயே இருக்கிறேன்,” என கூறியுள்ளார்.
தவறான மருத்துவ ஆலோசனையால் நேர்ந்த சோகம்
மருத்துவர்கள், ஜெஸ்ஸுக்கு மயக்கம் குறைக்கும் மருந்து வழங்கியபோதும், அது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறி அதை உட்கொள்ளாமல் இருக்க அறிவுரை வழங்கினர். இதனால், நோயின் தீவிரம் அதிகரித்து, அவர் மனநிலை மேலும் மோசமானது.
எந்தவொரு மனநல உதவியும் அவருக்கு வழங்கப்படாததால், ஜெஸ் தற்கொலை செய்து கொண்டார்.
அவரின் குழந்தை எல்சி, அவசர சிசேரியன் மூலம் பிறந்தாலும், நான்கு நாட்கள் மட்டுமே உயிருடன் இருந்து உயிரிழந்தாள்.
நோய் நிராகரிப்பு - மனித உயிர்களுக்கு பேரழிவு!
ஜெஸ் க்ரான்ஷாவின் மரணம், மருத்துவ உதவியின் குறைப்பாட்டால் நேர்ந்த ஒரு துயரச் சம்பவமாக விளங்குகிறது.
"ஒரு நபராவது உதவியிருந்தால், இதை தடுக்க முடியுமென்று எனக்குத் தெரியும்" என அவரது தாயார் வேதனையுடன் கூறுகிறார்.
இந்த சம்பவம், கர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்க்கொள்ளும் மருத்துவ, மனநலப் பிரச்சனைகளை சமுதாயம் மிகுந்த கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Kate Middleton, Jess Cronshaw, Hyperemesis Gravidarum, Pregnancy Sickness