உயிர் வாழ்வதற்கு 24 மணி நேர அவகாசம்: பிரித்தானிய இளம் பெண்ணுக்கு இறுதி நேரத்தில் கண்டறியப்பட்ட நோய்
மருத்துவர்கள் உயிர் வாழ்வதற்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கும் வரை பிரித்தானிய இளம்பெண் ஒருவர் தன்னுடைய கடுமையான வயிற்று வலியை பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
வயிற்று வலியால் அவதிப்பட்ட பிரித்தானிய இளம்பெண்
பிரித்தானியாவின் விக்டோரியா டான்சன் என்ற 33 வயது இளம் பெண் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை தன்னுடைய இரண்டு வேலைகளில் இடைவிடாமல் பணிபுரிந்து வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை பார்த்து வந்துள்ளார்.
முடிதிருத்தும் கலைஞராக பணிபுரியும் விக்டோரியா டான்சன் விடுமுறை நாட்களில் சமூகமயமாக்கல்(socialising) பணியை மேற்கொண்டு வந்துள்ளார், முதலில் தனக்கு ஏற்பட்ட வயிற்று வலி தன்னுடைய பரபரப்பான வாழ்க்கை சூழலே காரணம் என கருதிக் கொண்டார்.
crohnsandcolitissupportlancashire
மேலும் இது தொடர்பாக மருத்துவ சிகிச்சைக்காக சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி(irritable bowel syndrome) இருக்கலாம் என தெரிவித்தனர், ஆனால் இது தீவிரமான பிரச்சனை என்று விக்டோரியாவுக்கு தோன்றியது.
நாளடைவில் அதாவது ஒரு வருட தொடர் மருத்துவ வருகைக்கு பிறகு, டான்சன் கொலோனோஸ்கோபி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார், இந்த பரிசோதனை அவருக்கு கிரோன் நோய்(Crohn's disease) இருப்பதை வெளிப்படுத்தியது.
நோயின் தீவிர நிலைமை காரணமாக அதனை சமாளிக்கவும், தனிமைப்படுத்தப்பட்ட உணர்வாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
24 மணி நேர கால அவகாசம்
விக்டோரியா டான்சனின் குடலில் சீழ் ஏற்பட்டு அது கொடிய செப்சிஸை ஏற்படுத்தியதால், மருத்துவமனை டான்சனுக்கு 24 மணி நேர கால அவகாசம் மட்டுமே வழங்கியது, மேலும் அவரது கருப்பையில் உள்ள கட்டியை அகற்ற உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக விக்டோரியா பதிவிட்டுள்ள கருத்தில், தன்னுடைய வலியை போக்குவதற்கு எதையும் செய்யும் மனநிலையில் இருந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து அவருக்கு 2014ல் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் அவரது 18 இன்ச் குடல் வெட்டி அகற்றப்பட்டது, அத்துடன் அவரது உடலில் ileostomy பை பொருத்தப்பட்டது.
getty
“நான் கூறினேன் ileostomy பை எனக்கு வேண்டாம் என்று, ஆனால் நான் உயிர் வாழ்வதற்கு எனக்கு வேறு வாய்ப்பு இல்லை என விக்டோரியா டான்சன் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதன்பிறகும் அவரது குடலில் சிறிய பகுதியில் பழைய நோய் பாதிப்பு பரவி இருந்தது, எனவே மற்றொரு அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்து, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பிறகே தான் அனுபவித்த நிலையில் உள்ள மக்களுக்கு உதவுவதற்காக சமூக குழு ஒன்றை விக்டோரியா டான்சன் ஆரம்பித்து உதவிகளை செய்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |