AI பயன்பாட்டிற்கு 1 பில்லியன் பவுண்டு சொந்த பணத்தை செலவழிக்கும் பிரித்தானிய ஊழியர்கள்
UK workers spend 1Bn Pound on GenAI tools: AI பயன்பாட்டிற்கு பிரித்தானிய ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் 1 பில்லியன் பவுண்டு செலவழிகின்றனர்.
சொந்த பணத்தை செலவழித்து...
பிரித்தானியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டின் அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், பல ஊழியர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவழித்து Generative AI (GenAI) கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
Deloitte வெளியிட்ட ஆய்வின்படி, பிரித்தானியாவில் ஊழியர்கள் ஆண்டுதோறும் சுமார் 958 மில்லியன் பவுண்டு (ரூ.10,000 கோடி) செலவழிக்கின்றனர்.

ஆய்வில், பிரித்தானியாவில் மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள் GenAI கருவிகளை வேலைக்காக பயன்படுத்துவதாகவும், அதில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் தங்கள் நிறுவனத்திற்கு அறியாமல் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.
மிகக் குறைந்த நிறுவனங்களே தனிப்பட்ட AI கருவிகளை வழங்குகின்றன.
17 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே in-house கருவிகள் கிடைக்கின்றன. 34 சதவீத நிறுவன செலவில் வெளிப்புற கருவிகளை பயன்படுத்துகின்றனர். 46 சதவீதம் இலவச கருவிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் 17 சதவீத ஊழியர்கள் தங்கள் சொந்த பணத்தில் வெளிப்புற AI கருவிகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இதனால் “Shadow AI” எனப்படும் அனுமதியற்ற AI பயன்பாடு அதிகரித்துள்ளது. 88 சதவீத நிறுவனங்களில் வெளிப்புற AI கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன என ஆய்வு கூறுகிறது. மேலும், 51 சதவீத நிறுவனங்கள், ஊழியர்கள் ரகசிய தரவுகளை அனுமதியற்ற AI கருவிகளில் வழங்குகிறார்கள் என்ற அச்சத்தில் உள்ளன. GenAI பயன்பாட்டின் பயன்கள் கலவையாக உள்ளன. 32 சதவீத ஊழியர்கள் AI கருவிகள் நேரத்தை மிச்சப்படுத்துகின்றன என கூறினாலும், 18 சதவீத ஊழியர்கள் இதுவரை பயன் இல்லை என தெரிவித்துள்ளனர்.
Deloitte UK-ன் AI அதிகாரி Hayley McKelvey, “சவால் இனி மக்கள் AI பயன்படுத்துகிறார்களா என்பதல்ல. நிறுவனங்கள் அதை பாதுகாப்பாகவும், பொறுப்புடன், நீண்டகால மதிப்பை உருவாக்கும் வகையில் பயன்படுத்தச் செய்வது தான்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு, AI பயன்பாட்டில் நிறுவனங்களின் தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல், ஊழியர்கள் தனிப்பட்ட செலவில் AI கருவிகளைப் பயன்படுத்தும் நிலை உருவாகி இருப்பதை வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |