சீரழித்த ஈரானியர் நாடுகடத்தப்பட வேண்டும்: அப்போதுதான் பாதுகாப்பாக.. பிரித்தானியப் பெண் குமுறல்
பிரித்தானியாவில் தன்னை துஷ்பிரயோகம் செய்ததால் சிறையில் இருக்கும் ஈரானிய நபர், நாடுகடத்தப்பட்டால்தான் பாதுகாப்பாக உணர முடியும் என பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழைந்தவர்
ஈரானில் டிராக்டர் சாரதியாக பணிபுரிந்த கலாஃபி என்ற நபர், 2024ஆம் ஆண்டு ஒரு லொறியில் சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழைந்தார்.

இந்த நபர், கடந்த ஆண்டு மே 3ஆம் திகதி அதிகாலையில், 19 வயது பெண்ணான அப்பி ஜான்சனை கடுமையாக தாக்கி துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
பின்னர் கலாஃபி கைது செய்யப்பட்ட நிலையில், தன் மீதான 4 துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
அவருக்கு கடந்த வியாழக்கிழமை நான்கரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அதைத் தொடர்ந்து 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட உரிமத்தின் கீழும் தண்டனை விதிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

அவர் நாடு கடத்தப்பட வேண்டும்
இதனைத் தொடர்ந்து அப்பி ஜான்சனிடம் தண்டனை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன்; ஏனென்றால் அவருக்கு சுமார் 18 மாதங்கள் தண்டனை விதிக்கப்படும் என்று எங்களிடம் கூறப்பட்டது.
அதனால், நான்கரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட உரிமமும் கிடைத்தது மிகச் சிறப்பானது, அது மிகவும் அருமையானது.
கலாஃபி நாடு கடத்தப்பட்டால்தான் மிகவும் பாதுகாப்பாக உணர்வேன். அவர் இங்கு இருக்கும்போது நான் பாதுகாப்பாக உணரவில்லை, இது என் சொந்த நாடு; எனவே நான் பாதுகாப்பாக உணர அவர் நாடு கடத்தப்பட வேண்டும் என்று நம்புகிறேன்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |