வரிசை கட்டிய ரஷ்ய துருப்புகள்...ஒற்றை ஆளாய் தீர்த்துக்கட்டிய உக்ரைன் டாங்கி: வீடியோ ஆதாரம்!
உக்ரைனில் அத்துமீறி வரிசையாக நுழைந்த ரஷ்ய துருப்புகளை ஒற்றை T-64 ரக உக்ரைனிய டாங்கி அசால்ட்டாக சுட்டு வீழ்த்தியுள்ளது.
உக்ரைனின் நோவா பாசன்(nova basan) பகுதிக்குள் வரிசையாக நுழைந்த ரஷ்ய ராணுவ துருப்புகளை அப்பகுதியில் இருந்த ஒற்றை T-64 ரக உக்ரைனிய தடுப்பு டாங்கி சுட்டு வீழ்த்தி ரஷ்ய துருப்புகளை கதிகலங்க வைத்துள்ளது.
இந்த ஒற்றைT-64 ரக உக்ரைனிய தடுப்பு டாங்கி நடத்திய அடுத்தடுத்த தாக்குதலில் இரண்டு ஆயுதம் தாங்கிய ரஷ்ய வாகனம் அழிக்கப்பட்டு உள்ளது.
Footage captured by a Ukrainian military drone shows a Ukrainian tank ambushing a Russian Column in Nova Basan in Ukraine on last week. The stand-off was between the Dmytro Korchynsky Brotherhood Battalion and Russia. pic.twitter.com/sMbGGIC77y
— CBS News (@CBSNews) April 6, 2022
திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் கதிகலங்கி நின்ற ரஷ்ய துருப்புகள் எதிர்ப்பு தாக்குதல் நடத்த தயாரான போதும், எங்கிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரியாமல் ரஷ்ய துருப்புகள் விழிபிதுங்கி போகினர்.
ஆனால் ஒற்றை T-64 ரக உக்ரைனிய தடுப்பு டாங்கியோ லாபகமாக குடியிருப்பு கட்டிடத்தின் பின்புறத்தில் மறைந்து கொண்டு நடத்திய தாக்குதலில் ஆயுதம் ஏந்திய இரண்டு ரஷ்ய துருப்பு வாகனங்களை அளித்துள்ளது.
மேலும் ஒற்றை T-64 ரக உக்ரைனிய தடுப்பு டாங்கி நடத்திய தைரியமான தாக்குதல் தொடர்பான ட்ரோன் காட்சிகள் வெளியாகி உக்ரைன் மக்களுக்கு கூடுதல் தைரியத்தை அளித்து வருகிறது.
உக்ரைனில் நடந்துவரும் இந்த போர் தாக்குதலில் இதுவரை 20,000 ரஷ்ய படைவீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இவ்வாறு உக்ரைனில் ரஷ்ய ராணுவத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள போதிலும் ஜனாதிபதி புடினின் ஆக்கிரமிப்பு பசி குறையவில்லை என நேட்டோ தலைவர் எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து அத்துமீறும் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள்...கையும்களவுமாக சிக்கிய CCTV ஆதாரம்!