பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ரஷ்ய ராணுவத்திற்கு எச்சரிக்கை: ஆயுதங்களை போட்டுவிட்டு ஓடிவிடுங்கள் ஜெலன்ஸ்கி அதிரடி!
உக்ரைன் போர் குறித்து ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ஓடிவிடுங்கள் என ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு உக்ரைனின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்க்கிவ் ரஷ்ய ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் நான்காவது நாளான நேற்று கொண்டுவந்தது. அதனை தொடர்ந்து, ரஷ்யா உக்ரைனை அவர்களது நட்பு நாடான பெலாரஸில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது.
ஆனால் இதனை முதலில் ஏற்க மறுத்த உக்ரைன் ஜானதிபதி ஜெலன்ஸ்கி பின்பு சில நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொண்டார்.
"Just save your lives and go".
— euronews (@euronews) February 28, 2022
?? Ukrainian President Volodymyr Zelenskyy tells Russian soldiers to drop their weapons and "get out of here" as Moscow's invasion enters its fifth day. #UkraineRussia pic.twitter.com/Lu7vujk0yh
இந்த நிலையில் போரை நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தை இன்று பெலாரஸில் நடைபெறவிருக்கும் சூழலில், ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விடியோ பதிவு ஒன்றை ஜானதிபதி ஜெலன்ஸ்கி வெளிட்டுள்ளார்.
அதில், ரஷ்ய ராணுவ வீரர்களே உங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ஓடிவிடுங்கள், உங்கள் கமாண்டர்கள் மற்றும் கொள்கை பிரச்சாரகர்களின் வார்த்தைகளை நம்பாமல் உங்கள் உயிரை காப்பாற்றி கொண்டு ஓடிவிடுங்கள் என எச்சரித்துள்ளார்.