திணறும் ரஷ்யா! 300 பேர் வாரக்கணக்கில் பிணைக்கைதிகளாக சிறைபிடிப்பு... முக்கிய தகவல்
உக்ரைனில் 300 பேர் ரஷ்ய படைகளால் பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் நடத்தும் தாக்குதல் 50வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போர் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருக்கும் என முதலில் நினைக்கப்பட்ட நிலையில் உக்ரைனும் தரமான பதிலடியை கொடுத்துள்ளது.
நேற்று கூட ரஷ்யாவின் மிக பயங்கரமான போர்க்கப்பலை உக்ரைன் அழித்தது, ஆனாலும் தாங்கள் உதைபடுவதை பெரிதாக ரஷ்யா ஒப்பு கொள்ளாமல் இருக்கிறது.
இதனிடையே 1,026 உக்ரான் வீரர்கள் ரஷ்யப் படையினரிடம் சரணடைந்துள்ளதாகவும், அவர்களில் 162 பேர் உயரதிகாரிகள், 47 பெண் வீரர்கள் என ரஷ்யா கூறியது. உக்ரைன் ராணுவம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், உக்ரைனில் செர்னிஹிவ் நகருக்கு அருகே உள்ள ஒரு பள்ளியின் அடித்தளத்தில் கிராம மக்கள் 300 பேரை 4 வாரங்களாக பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைத்துள்ளனர் ரஷ்யப் படையினர் என்று உக்ரைன் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உக்ரைன் ராணுவ அமைச்சகம் தெரிவிக்கையில், செர்னிஹிவ் நகருக்கு அருகே யாஹிட்னே என்ற இடத்தில் கிராம மக்களை 300 பேரை ரஷ்யப் படையினர் பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைத்துள்ளனர்.
18 பேர் ரஷ்ய ஆக்கிரமிப்பின் போது கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யா தனது நாசவேலையை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.