உக்ரேனிய தாய் மற்றும் மகளைத் துஷ்பிரயோகம் செய்த ரஷ்ய ராணுவ வீரர்கள்: அதிர்ச்சியூட்டும் சம்பவம்!
இரண்டு ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைனிய பெண்ணையும், அவரது மகளையும் துஷ்பிரயோகம் செய்ததாக உக்ரேனிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரஷ்ய ராணுவத்தினரின் அராஜகம்
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே போர் நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இரண்டு ரஷ்ய வீரர்கள் ஒரு இளம்பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாகவும், அவரது தாயைத் துப்பாக்கி முனையில் மிரட்டி கும்பலாக கூட்டுத் துஷ்பிரயோகம் செய்ததாகவும் உக்ரைன் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
@Handout
மேலும் இதனை தடுக்க சென்ற அவரது தந்தையை மண்டியிட வைத்துப் பார்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தியிருக்கின்றனர். அவரை பலமாகத் தாக்கி விட்டு அப்பெண்களைத் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
@reuters
ராய்ட்டர்ஸாஸ் மதிப்பாய்வு செய்யப்பட்ட கோப்புகளில், மார்ச் 2022ல் கியேவின் கிழக்குப் புறநகரப் பகுதியான புரோவரி மாவட்டத்தில் நான்கு வீடுகளில் ரஷ்ய ராணுவ படையினரால் நடத்தப்பட்ட துஷ்பிரயோக குற்றங்களைப் பற்றி விவரித்துள்ளனர்.
கூட்டுத் துஷ்பிரயோகம்
2022 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி, 28 மற்றும் 32 வயதுடைய இரண்டு ரஷ்ய ராணுவ வீரர்கள் மதுபோதையில் புரோவரியிலுள்ள ஒரு வீட்டிற்கும் புகுந்துள்ளனர்.
அவர்கள் அந்த விட்டிலிருந்த ஒரு நபரை உலோகப்பானையால் அடித்துள்ளனர். பின்னர் அவரது மனைவியைக் கூட்டுத் துஷ்பிரயோகம் செய்து அவரை மண்டியிட்டுப் பார்க்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர் என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
@afp
மேலும் அந்த இரு ராணுவ வீரர்கள் இன்னொரு வீட்டில் 41 வயது கர்ப்பிணி மற்றும் 17 வயது சிறுமி ஒருவரையும் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.
பல குடும்பங்கள் வசிக்கும் ஒரு இடத்தில், ரஷ்ய ராணுவ வீரர்கள் அனைவரையும் சமையலறைக்குள் கட்டாயப்படுத்தி அடைத்துவிட்டு, ஒரு தாயையும் அவரது 15 வயது மகளையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர், என வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் உயிர் பிழைத்துள்ளனர், மேலும் மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இறந்த ராணுவ வீரர்கள்
இரண்டு துப்பாக்கி சுடும் வீரர்களில் ஒருவர் இறந்துவிட்டார், மற்றவர் யெவ்ஜெனி செர்னோக்னிஷ்னி ரஷ்யாவுக்குத் திரும்பியதாக நம்பப்படுகிறது.
ஆனால் செர்னோக்னிஸ்னியின் உறவினர்களை ராய்ட்டர்ஸ் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரும் இறந்துவிட்டார் என்று கண்ணீர் மல்க அவரது குடும்ப உறுப்பினர் கூறியுள்ளனர்.
@gettyimages
உக்ரைனின் வக்கீல் ஜெனரல் அலுவலகம் கடந்த பிப்ரவரியில் ரஷ்யப் படைகள் படையெடுத்ததிலிருந்து 71,000 போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை, ஒரு கற்பழிப்பு உட்பட 26 ரஷ்யர்கள் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.