ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த உக்ரைனிய நடிகரின் கடைசி பதிவு!
உக்ரைனில் ரஷ்ய படைகளுக்கு எதிராக போராடி ஷெல் தாக்குதலில் உயிரிழந்த உக்ரைனிய நடிகர் கடைசியாக தனது இன்ஸ்டாக்ரா, பக்கத்தில் பதிவிட்ட வீரமான பதிவு தற்போது வைரலாகிவருகிறது.
ரஷ்யப் போருக்கு எதிராக தனது நாட்டைப் பாதுகாக்க ஆயுதப் படையில் சேர்ந்த உக்ரேனிய நடிகர் பாஷா லீ (Pasha Lee) தனது 33-வது வயதில் இர்பினில் (Irpin) ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அவர் இறப்பதற்கு முன் இன்ஸ்டாகிராமில் இராணுவ உடையுடன் ஒரு புகைப்படத்தையும் வீரமிக்க பதிவையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார்.
அந்தப் பதிவில், "கடந்த 48 மணி நேரங்களாக நாங்கள் எப்படி குண்டுவெடிப்புக்கு ஆளாகிறோம் என்பதை உட்கார்ந்து படம் எடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது, நாங்கள் சிரித்துக்கொண்டுதான் இருக்கிறோம், ஏனென்றால் நாங்கள் (ரஷ்ய படைகளை) சமாளிப்போம்" என்று கூறியிருந்தார்.
அவர் உயிரிழந்த நிலையில், மார்ச் 4-ஆம் திகதி வந்த அவரது இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையத்தில் பரவிவருகிறது.
கிரிமியாவில் பிறந்த நடிகர் பாஷா லீ, கடந்த மாதம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போராட நாட்டின் பிராந்திய பாதுகாப்புப் படையில் சேர்ந்தார்.
உக்ரைனின் தேசிய பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் செர்ஜி டோமிலென்கோ மற்றும் ஒடெசா சர்வதேச திரைப்பட விழா அவரது மரணச் செய்தியை உறுதிப்படுத்தியது.