ஏராளம் Hypersonic ஏவுகணைகளைத் தயாரிக்க புடின் முடிவு: உக்ரைன் நேட்டோவுடன் அவசர ஆலோசனை
ரஷ்ய ஜனாதிபதி புடின் Hypersonic ஏவுகணைகளை பெருமளவில் தயாரிக்க உத்தரவிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், போர்ச்சூழலை மேலும் பரபரப்படையச் செய்துள்ளது.
புடினுடைய அறிவிப்பைத் தொடர்ந்து, உக்ரைன் நேட்டோவுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Hypersonic ஏவுகணைகளைத் தயாரிக்க புடின் முடிவு
உக்ரைனிலுள்ள Dnipro என்னும் நகரம் மீது நேற்று முன் தினம் ஏவுகணை ஒன்றை வீசியது ரஷ்யா. அது Oreshnik ஏவுகணை வகையைச் சேர்ந்தது என புடின் தெரிவித்துள்ளார்.
காற்றைவிட வேகமாக பயணிக்கக்கூடிய அந்த ஏவுகணை உலகில் வேறு யாரிடமும் இல்லை என்றும், அதை எதிர்கொள்ளும் சக்தி எதற்கும் இல்லை என்றும் புடின் கூறியுள்ளார்.
அத்துடன், போரில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய Oreshnik ஏவுகணைகளை பெரிய அளவில் தயாரிக்க புடின் உத்தரவிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் நேட்டோவுடன் அவசர ஆலோசனை
புடினுடைய அறிவிப்பைத் தொடர்ந்து, உக்ரைன் நேட்டோவுடன் அவசர பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.
செவ்வாயன்று நேட்டோ அமைப்பும் உக்ரைனும் இந்த பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |