உக்ரைனுக்கு கோபத்தை ஏற்படுத்திய செயல்! பிரபல டென்னிஸ் வீரரின் தந்தைக்கு தடை விதிக்க கோரிக்கை..சர்ச்சை வீடியோ
ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நடந்துகொண்டதாக பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் தந்தை மீது உக்ரைன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஜோகோவிச் வெற்றி
செர்பிய டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் தந்தை Srdan Dokovic, அவரது மகன் அரையிறுதியை எட்டியவுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் ரஷ்ய ஆதரவாளர்கள் சிலர் கொடியை அசைத்துக் கொண்டிருக்கும்போது அவர்களுடன் இணைந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.
மேலும் அவர் புடினின் 'Z' சின்னத்தை அணிந்திருந்தார். இது உக்ரைனுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.
ஜோகோவிச் தந்தைக்கு தடை
இதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு Srdan Dokovic-யிற்கு தடை விதிக்க வேண்டும் என உக்ரைன் தூதர் கோரிக்கை விடுத்துள்ளார். சர்ச்சைக்குரிய தருணத்தை வெளிப்படுத்தும் வீடியோ ரஷ்யாவுக்கு ஆதரவான யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், மெல்போர்ன் பூங்காவில் இருந்து நான்கு பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டதை காவல்துறை மற்றும் டென்னிஸ் அவுஸ்திரேலியா பின்னர் உறுதிப்படுத்தியது.
உக்ரைனில் நடந்து வரும் போரின் காரணமாக ரஷ்யா அல்லது பெலரசுக்கு ஆதரவாக எந்தக் கொடியையும் அவுஸ்திரேலிய ஓபன் நுழைவு விதிகள் தடை செய்யவில்லை, அதே நேரத்தில் உக்ரேனிய வீரர்கள் தேசியக் கொடியின் கீழ் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.