கீவுக்குள் நுழையும் ரஷ்ய படைகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி: உக்ரைன் ராணுவம் அதிரடி!
உக்ரைனின் தலைநகர் கீவ்வில் ரஷ்ய படைகளின் நுழைவை தடுக்கும் விதமாக அழிக்கப்பட்ட ரஷ்ய ராணுவ துருப்பு வாகனங்களை சாலையில் கொட்டி, உக்ரைன் ராணுவத்தினர் தடுப்பு அரண்களை ஏற்படுத்தியுள்ளனர்.
உக்ரைனில் ரஷ்யா ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், இன்று உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்க்கிவ்வில் ரஷ்ய படைகள் தீவிரமான தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மேலும் உக்ரைனை முழுமையாக கைப்பற்று விடவேண்டும் என்ற முனைப்பில் சுமார் 40 மைல் தூரத்திற்கு ரஷ்யா ராணுவ துருப்புகளை ஜனாதிபதி விளாடிமிர் புதின் அனுப்பி வைத்துள்ளார்.
Місто Буча, Київська область. Не гостинний прийом непроханих гостей з росії. pic.twitter.com/OXCZFsDB4U
— ВОЇНИ УКРАЇНИ?? (@ArmedForcesUkr) March 2, 2022
இந்த நிலையில் ரஷ்ய ராணுவ துருப்புகளை வரவேற்கும் விதமாக, உக்ரைனின் தலைநகர் கீவ்வின் அருகில் அமைந்துள்ள புச்சா நகரின் சாலைகளில் உக்ரைன் ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்ட ரஷ்ய ராணுவ துருப்புகளை கொட்டி வைத்துள்ளனர்.
இதுகுறித்து உக்ரைனின் ஆயுதப்படை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ரஷ்யாவில் இருந்து அழைக்கப்படாமல் உக்ரைனிற்கு வந்திருக்கும் விருந்தினர்களுக்கு, இது விருந்தோம்பல் வரவேற்பு இல்லை என தெரிவித்துள்ளனர்.