உக்ரைன் நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதல்: கொல்லப்பட்ட 12 ரஷ்ய FSP அதிகாரிகள்
உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 12 ரஷ்ய FSP அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைனின் துல்லிய தாக்குதல்
ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட டோனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய கட்டளை மையம் மீது உக்ரைனிய ராணுவ படையினர் ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ட்ரோன் தாக்குதலில் 12 உளவுத்துறை அதிகாரிகள்(FSP) கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உக்ரைனின் ட்ரோன் தளபதி ராபர்ட் ப்ரோவ்டி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஷ்யாவின் பாதுகாப்பு சேவை(FSP) ஏஜெண்டுகள் தங்கியிருந்த கட்டிடத்தையே உக்ரைனிய இராணுவ படையினர் குறிவைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் 100 கிலோ எடையுள்ள வெடிபொருள்களை சுமந்து செல்லக்கூடிய 8 ஃபர்ஸ்ட் பெர்சன் வியூ ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் 12 அதிகாரிகள் கொல்லப்பட்டு இருப்பதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |