ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்திற்கு ஆபத்து - ரஷ்ய அணுசக்தித் தலைவர்
Ukraine attack fuel trucks in zaporizhzhia plant: உக்ரைன் நடத்திய தாக்குதலினால் அணுமின் நிலையத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அணுசக்தித் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாக உள்ளது ஸபோரிஷியா. இது ஆறு அணு உலைகளைக் கொண்டது.
ஸபோரிஷியா அணுமின் நிலையம்
போரின் ஆரம்ப வாரங்களில் ரஷ்யப் படைகள் இந்த அணுமின் நிலையத்தை கைப்பற்றியது.

இந்நிலையில், ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் டீசல் எரிபொருள் லொறிகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.
இதில் இரண்டு ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் வேண்டுமென்றே பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகவும் ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் அலெக்ஸி லிகாச்சேவ் (Alexei Likhachev) தெரிவித்துள்ளார்.
கடுமையான காயங்கள்
மேலும் ஏராளமான ரஷ்ய வீரர்கள் இந்தத் தாக்குதலில் காயமடைந்ததாகவும், சிலருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இந்த அணுமின் நிலையத்தை ரஷ்யா கைவிட்டு அதன் செயல்பாட்டினை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உக்ரைன் கோரியுள்ளது.
ஆனால், ரஷ்யா இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. தற்போது அங்குள்ள எரிபொருள் மூலம் மின்சாரம் எதுவும் உற்பத்தி செய்யப்படவில்லை.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |