ஈரான் கடும் எச்சரிக்கை ஈரானை வம்புக்கு இழுக்கும் உக்ரைன்: ஈரானிய வணிக கப்பல் மீது திடீர் தாக்குதல்
ஈரானிய வணிக கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் அரசு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஈரான் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல்
காஸ்பியன் கடல் பிராந்தியத்தில் உக்ரைனிய படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானுக்கு சொந்தமான வணிக கப்பல் ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது.
உக்ரைனிய படைகளின் இந்த தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன், மற்றொரு நபர் காயமடைந்துள்ளார்.
இந்நிலையில் உக்ரைனிய படைகளின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் மீது நேரடி குற்றச்சாட்டு
இந்த தாக்குதல் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்(X) தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மீது நேரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதல் ஐ.நா சாசனத்தின் விதிகளை மீறும் செயல் என்றும், ஐரோப்பாவை போருக்குள் இழுப்பதற்காக இஸ்ரேல் உக்ரைனை தூண்டி விடுவதாகவும் அராக்சி குற்றம் சாட்டியுள்ளார்.
சனிக்கிழமை ஈரானிய வணிக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை உக்ரைனிய ஜனாதிபதி தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த பதில் எச்சரிக்கை வெளிவந்துள்ளது.
உக்ரைனின் தாக்குதல் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு கொள்கை உயர் பிரதிநிதி காஜா கல்லாஸ் மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கியதாக அராக்சி உறுதிப்படுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |