ரஷ்யாவுக்கு தரமான பதிலடி கொடுக்கும் உக்ரைன்! 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது.. ராணுவம் அதிரடி
ரஷ்ய ஜெட் விமானங்களை வீழ்த்தி உக்ரைன் பதிலடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா அதிரடி தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது. அதன்படி அந்நாட்டு ராணுவம் உக்ரைன் தலைநகர் கீவ்-இல் தனது குண்டு மழை பொழியத் தொடங்கியுள்ளது. மேலும் கிழக்கு உக்ரைனிலும் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பதிலடியாக ரஷ்ய விமானத்தை முதலில் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
அதாவது உக்ரேனிய இராணுவத்தின் கூற்றுப்படி, உக்ரேனிய வான் பாதுகாப்பு ரஷ்ய ஜெட் விமானத்தை நாட்டின் கிழக்கில் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐந்து ரஷ்ய ஜெட் விமானங்களையும் ஒரு ஹெலிகாப்டரையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.