ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதி மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 24 பேர் வரை உயிரிழப்பு
ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகள் மீது உக்ரைன் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 24 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

ரஷ்யா முன்னெடுத்து வரும் இந்த போர் தாக்குதலின் விளைவாக பெருமபாலான உக்ரைனிய பகுதிகளை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
இந்த போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு தீவிரமாக முயன்று வருகிறது.
உக்ரைன் தாக்குதல்
இந்நிலையில் ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனிய பகுதிகள் மீது உக்ரைன் தனது ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட கெர்சன் பகுதியில் மக்கள் புத்தாண்டை கொண்டாட்டங்களுடன் வரவேற்ற போது உக்ரைன் இந்த ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் 24 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதுடன், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
உக்ரைனின் இந்த வான்வழித் தாக்குதலுக்கு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |