ரஷ்யாவில் பயணிகள் பேருந்தை குறிவைத்த உக்ரைன்: சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவில் பயணிகள் பேருந்தை குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தீவிரமடையும் மோதல்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் இந்த வாரம் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன.
இருநாடுகளும் மாறி மாறி நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி தாக்குதலை முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில் ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் இருந்த பயணிகள் பேருந்து மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் சிறுவன் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் 23 பேர் காயமடைந்து இருப்பதாகவும், அவர்களின் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் உக்ரைனிய நகரங்களான பாவ்லோக்ராட் மற்றும் கிரமடோர்க் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் ஸபோரிஷியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |