ஒரே இரவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் சரமாரி தாக்குதல்! 40 ட்ரோன்களை சுட்டுவீழ்த்திய ரஷ்யா
ரஷ்யாவின் சரடோவ் பிராந்தியத்தின் தொழில்துறை தளம் மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் தீப்பிடித்தது.
மாஸ்கோவில் இருந்து தென்கிழக்கே 275 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பிராந்தியம் சரடோவ் (Saratov).
இங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
ஆனால், தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் பிராந்தியத்தை தாக்கிய ட்ரோன்களில் 18 மற்றும் ஐந்து பிராந்தியங்களில் 40 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
எனினும் தொழில்துறை தளத்தில் உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் தீப்பிடித்து எரிந்ததாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் கஸான், கிரோவ் மற்றும் சரடோவ் நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் ட்ரோன்களின் அச்சுறுத்தல் காரணமாக, உள்வரும் மற்றும் வெளியே செல்லும் அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்தின.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |