பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பிரித்தானிய ஏவுகணைகள் மூலம் உக்ரைன் தாக்கி அழித்துள்ளது.
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்
ரஷ்யா மீதான தனது நீண்ட தூரத் தாக்குதல் நடவடிக்கையை உக்ரைன் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் ரோஸ்டோவ்(Rostov) பகுதியில் அமைந்துள்ள நோவோஷாக்டின்ஸ்க்(Novoshakhtinsk) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் தனது நீண்ட தூரத் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு உக்ரைனிய ராணுவம் பிரித்தானியாவின் ஸ்டார்ம் ஷேடோ(Storm Shadow) ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளது.
தாக்குதல் விவரம்

உக்ரைனின் இந்த தாக்குதலின் போது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பல பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிய படைகளால் தாக்கப்பட்ட இந்த நோவோஷாக்டின்ஸ்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையானது தெற்கு ரஷ்யாவில் உள்ள ரஷ்ய படைகளுக்கு தேவையான எரிப்பொருளை வழங்கும் முக்கிய தளமாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |