உக்ரைனில் குழந்தைக்கும் பொலிஸ் தந்தைக்கும் இடையில் நடந்த பாசப்போராட்டம்! கலங்கவைக்கும் வீடியோ
உக்ரைனில் ரஷ்யா உடனான போருக்கு மத்தியில், நாட்டை விட்டு வெளியேறவேண்டிய சூழலில், தனது பொலிஸ் தந்தையை விட்டு பிரிய முடியால் சண்டைபோடும் குழந்தையின் வீடியோ பார்ப்பவர்களை கலங்கவைக்கிறது.
ரஷ்ய படையெடுப்பின் காரணமாக உக்ரைனில் தொடர்ந்து நான்காவது வாரமாக போர் நடக்கிறது. கிட்டத்தட்ட 2.7 மில்லியன் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
நாட்டிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் யாரும் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல அனுமதி இல்லை. அவர்கள் அனைவரும் நாட்டுக்காக ரஷ்ய படைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போரிட வேண்டும் என உக்ரைன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அப்படியெனில் காவல்துறையினர், இராணுவத்தினரின் நிலையை சொல்லவேண்டியது இல்லை. நாட்டை அந்நியர்களிடமிருந்து தக்கவைத்துக்கொள்ளும் பெரும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் மட்டுமே நாட்டிலிருந்து வெளியேறிவருகின்றனர்.
PC: Twitter
அந்த வகையில், காவல்துறை மற்றும் இராணுவ வீரர்களின் மனைவி குழந்தைகள் நாட்டுக்காக போராடும் தங்கள் கணவன் மற்றும் தந்தையை விட்டு வேறு வழியின்றி பிரியாவிடை பெற்றுவருகின்றனர்.
அந்த வகையில், Irpin நகரத்தில் ஒரு உக்ரேனிய குழந்தை தனது பொலிஸ் தந்தையை விட்டு பிரியப்போகிறோம் என அறிந்து பேசவோ சொல்லவோ தெரியாமல் அழுதுகொண்டே சண்டை போடுகிறது.
அருகில் கணவனை விட்டு பிரியும் சோகத்தில் கண்கலங்கியபடி பேசிக்கொண்டிருக்கும் பெண் தனது குழந்தையை தூக்கிச் செல்ல முயற்சிக்கிறார். தந்தைக்கும் மனைவி மகனை விட்டுப்பிரிய மனமில்லை, குழந்தையை இறுக்கிப் பிடித்தபடி மகனின் பாசமான அடிகளை வாங்கிக்கொண்டு கண்கலங்கி நிற்கிறார்.
A Ukrainian baby sobs and puts up a fight as his father tries to hug him and say goodbye. The father, a Ukrainian police officer, had to stay in the country as his family fled Irpin. pic.twitter.com/P0LwHBXe7k
— CBS News (@CBSNews) March 17, 2022
குழந்தையின் கையில் சாக்லேட் கொடுக்க முயற்சிக்கிறார், அனால் வாங்க மறுக்கிறது.
பார்ப்பவர்களின் மனதை நொடியில் கலங்கடிக்கும் இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.