ரஷ்யா, பெலாரஸ் ஆகிய நாடுகளுடன் போட்டியிடும் விளையாட்டு அணிகளுக்கு தடை விதித்த உக்ரைன்!
ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்களை உள்ளடக்கிய ஒலிம்பிக், ஒலிம்பிக் அல்லாத மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உக்ரைன் தனது தேசிய விளையாட்டு அணிகளுக்கு தடை விதித்துள்ளதாக விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாராலிம்பிக் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்களை நடுநிலையாளர்களாக போட்டியிட அனுமதித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
image credit:sky sports
விளையாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவித்தல் படி துணை விளையாட்டு அமைச்சர் மத்வி பிட்னி இரவோடு இரவாக கையெழுத்திட்டார்.
ஒலிம்பியன் skeleton பந்தய வீரர் விளாடிஸ்லாவ் ஹெராஸ்கேவிச் உட்பட சில உக்ரேனிய விளையாட்டு வீரர்கள் தடையை விமர்சித்துள்ளனர், இது உக்ரேனிய விளையாட்டுகளை அழிக்கும் என்று கூறியுள்ளார்.
"உக்ரேனிய பிரதிநிதிகள் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை என்றால், நாங்கள் சர்வதேச விளையாட்டு மைதானங்களை முழுவதுமாக காலி செய்து, ரஷ்ய / பெலாரஷ்ய பிரதிநிதிகளுக்கு அவர்களின் கதைகள் மற்றும் பிரச்சாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறோம்" என்று விளாடிஸ்லாவ் ஹெராஸ்கேவிச் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
2/12
— Vladyslav Heraskevych OLY (@heraskevych) April 13, 2023
Мінмолодьспорт вважає, що повна відсутність українських команд та будь-яких представників України на міжнародних спортивних аренах = недопущення російської пропаганди у середовищі міжнародної спортивної спільноти ?
Хоча очевидно, що це повна протилежність… pic.twitter.com/nkGYtEu8ey