Euro 2024யில் உக்ரைன் அபார வெற்றி! பிரான்ஸை டிரா செய்த நெதர்லாந்து
யூரோ 2024 தொடரில் உக்ரைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சுலோவாகியா அணியை வீழ்த்தியது.
Merkur Spiel Arena மைதானத்தில் நடந்த போட்டியில் உக்ரைன் மற்றும் சுலோவாகியா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் சுலோவாகியா அணிக்கு கோல் கிடைத்தது. அந்த அணியின் இவான் ஸ்சரன்ஸ் தலையால் முட்டி அபாரமாக கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 54வது நிமிடத்தில் உக்ரைன் வீரர் மைக்கோலா ஷபாரென்கோ (Mykola Shaparenko) துல்லியமாக கோல் போட்டார்.
Delicious control ?@Alipay | #EUROskills pic.twitter.com/c5l8WhMLnv
— UEFA EURO 2024 (@EURO2024) June 21, 2024
பின்னர் உக்ரைன் அணியின் ரோமன் யாரெம்சுக் (Roman Yaremchuk), 80வது நிமிடத்தில் உயர பறந்து வந்த பந்தை லாவகமாக காலில் வாங்கி வலைக்குள் தள்ளினார். இதன்மூலம் உக்ரைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
Red Bull Arena Leipzig மைதானத்தில் நடந்த பிரான்ஸ் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான மற்றொரு போட்டி டிராவில் முடிந்தது.
????? Defences on top in goalless draw...
— UEFA EURO 2024 (@EURO2024) June 21, 2024
Match report ?️⬇️#EURO2024 | #NEDFRA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |