ரஷ்ய டாங்கிகளை சுக்குநூறாக வெடிக்கச்செய்யும் உக்ரைன் படை! வெளியான பரபரப்பு வீடியோ
உக்ரேனியப் படைகள் ரஷ்ய டாங்கி ஒன்றை வெடிக்கச்செய்யும் பயங்கரமான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக ரஷ்ய இராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. ஆனால், ரஷ்யாவுக்கே அதிக அளவில் இராணுவ இழப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் பல வாகனங்கள், டாங்கிகளை அடித்து நொறுக்கியுள்ளது உக்ரைன். மேலும், ரஷ்ய வீரர்களில் குறைந்தது 12,000 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் அந்த வீடியோவில், வேகமாக முன்னேறி வந்துகொண்டிருந்த ரஷ்ய டாங்கி ஒன்றின் மீது கண் இமைக்கும் நொடியில் டாங்கி எதிர்ப்பு ரொக்கெட் (anti-tank rocket) மூலம் தாக்குதல் நடந்தி அழிக்கப்பட்டது.
உக்ரைனின் 25-வது தனி வான்வழிப் படை யான சிசெஸ்லாவ் படை இந்த தாக்குதலை நடத்தியது. டாங்கியை வெடிக்கச்செய்துவிட்டு, "கேம் ஓவர், ரஷ்ய படையெடுப்பாளர்கள்" என்று கூறியதாகா உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.