ரஷ்ய டாங்கிகள், பீரங்கிகளை சுட்டு வீழ்த்திய உக்ரைன்! வெளியான வீடியோ ஆதாரம்
ரஷ்ய இராணுவ டிரக் மற்றும் டாங்கிகளை உக்ரைன் படைகள் தாக்கி அழித்த காணொளி வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 70-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, கடந்த இரண்டு வாரங்களாக டான்பாஸ் பகுதியில் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனின் 30-வது படைப்பிரிவு, மோர்ட்டர் குண்டுகள் மூலம் ரஷ்ய இராணுவ டிரக், டாங்கிகள் மற்றும் MT-12 Rapira AT துப்பாக்கிகளை தாக்கி அழித்துள்ளன.
உக்ரைனில் போராளியாக மாறிய பத்திரிக்கையாளர் மரணம்: ஜெலென்ஸ்கி
தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், 30-வது படைப்பிரிவின் (Mechanized Brigade) Stugna-P ATGM மோர்ட்டர் தாக்குதலில் டாங்கிகள், ரஷ்ய துப்பாக்கிகள் பயங்கரமாக வெடித்து சிதறும் காட்சிகள் அடங்கியுள்ளன.
அதே 30-வது படைப்பிரிவு டான்பாஸில் ரஷ்ய/பிரிவினைவாதிகள் அகழி கோடுகள் மற்றும் கோட்டைகளை குறிவைத்து மோர்ட்டர் குண்டு தாக்குதல் நடத்திய விடியோவும் வெளியாகியுள்ளது.
The same Brigade’s mortar fire targeting Russian/Separatists trench lines and fortifications in Donbas.#Russia #Ukraine pic.twitter.com/M8jH3kOg5J
— BlueSauron?️ (@Blue_Sauron) May 5, 2022
பள்ளி பேருந்துக்குள் சிக்கிய 3 வயது சிறுமி உயிருக்கு போராட்டம்., அவுஸ்திரேலியாவில் பரபரப்பு சம்பவம்