ஸ்வீடன் நாட்டு போர் விமானங்களை வாங்கும் உக்ரைன்: நிதியுதவி வழங்கும் பிரித்தானியா
ஸ்வீடன் நாட்டு போர் விமானங்களை வாங்க உக்ரைனுக்கு பிரித்தானியா 300 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி வழங்கியுள்ளது.
உக்ரைனுக்கு கிரிப்பன் போர்விமானம்
ரஷ்யாவின் அத்துமீறல்களை சமாளிக்க ஸ்வீடன் நாட்டு தயாரிப்பான கிரிப்பன் ரக போர் விமானங்களை(Gripen jets) உக்ரைன் வாங்குவதற்காக பிரித்தானியா சுமார் 300 மில்லியன் யூரோக்களை நிதியுதவியாக வழங்குவதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
தன்னுடைய பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னதாக, பிரதமர் ஸ்டார்மர் மேற்கொண்ட கடைசி அதிகாரப்பூர்வ உக்ரைனிய பயணத்தில் இந்த முக்கியமான நிதியுதவி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்வீடன் நாட்டின் SAAB பாதுகாப்பு நிறுவனத்திற்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த மாதம் கையெழுத்தான 2.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தின் ஒரு பகுதி தான், இந்த நிதியுதவி ஆகும்.
இரு நாட்டு தலைவர்களின் கருத்து
இந்த சந்திப்பின் போது பதவி விலகல் மற்றும் நீடித்து வரும் போர் சூழ்நிலை குறித்து பிரதமர் ஸ்டார்மரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பிரதமர் ஸ்டார்மர், இது தன்னுடைய தனிப்பட்ட விவகாரம் இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக சண்டை போட்டு வரும் உக்ரைனின் இறையாண்மை பற்றியது என குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனிய பிரதமர் ஜெலென்ஸ்கி பிரித்தானியாவின் தீர்க்கமான ஆதரவை பாராட்டும் வகையில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு Order of Freedom என்ற விருதை வழங்கி கெளரவித்தார்.
மேலும் உக்ரைனுடன் பிரித்தானியா தொடர்ந்து துணை நின்று வருகிறது, இதனை நாங்கள் மிகவும் மதிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |