நடுவானில் தீப்பிடித்த உக்ரைன் சரக்கு விமானம்., வெளிநாட்டு மண்ணில் விழுந்து வெடித்த வீடியோ
உக்ரைனுக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று நடுவானில் தீப்பிடித்ததையடுத்து, கிரீஸ் நாட்டில் விழுந்து வெடித்தது. விமானம் விழுந்து வெடித்த காட்சிகள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன.
வடக்கு கிரீஸில் உள்ள பேலியோச்சோரி கவாலாஸ் அருகே சரக்கு விமானம் ஒன்று சனிக்கிழமை பிற்பகுதியில் விபத்துக்குள்ளானதாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.
விமானம் தீப்பிடித்து எரிந்ததாகவும், வெடிச்சத்தம் கேட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியதாக ஏதென்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு 15 தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஏழு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் வெடிப்புகள் நடந்து கொண்டிருப்பதால் அவர்களால் நெருங்க முடியவில்லை.
தகவல்களின்படி, உக்ரைன் நிறுவனத்திற்கு சொந்தமான Antonov-12BK ரக சரக்கு விமானம் செர்பியாவிலிருந்து ஜோர்டானுக்கு பயணித்துக்கொண்டிருந்தது, அப்போது விமானத்தில் திடீரென தீப்பிடித்ததால் அருகிலுள்ள கவாலா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க அனுமதி கோரியது, ஆனால் கவாலா சென்றடைவதற்குள் அது கீழே விழுந்து வெடித்தது.
A cargo aircraft An-12BK owned by a Ukrainian company crashed in Greece while flying from Serbia to Jordan.
— Euromaidan Press (@EuromaidanPress) July 17, 2022
The crew declared an emergency due to an engine fire. Images captured by witnesses show how the aircraft hit the ground. pic.twitter.com/0ZjeT0nQ6J
விமானத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனால் அந்த விமானத்தில் 3 பேர் கொண்ட பணியாளர்கள் இருந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
A cargo aircraft that crashed with 8 people on board was carrying “ about 12 tonnes of dangerous materials”, acc to Greek media. Investigations underway to determine “a white substance of unknown origin that appears to have been found at the site” #Greece pic.twitter.com/ZMYxZcg8Si
— Daphne Tolis (@daphnetoli) July 17, 2022