உக்ரைன் போரில் குழந்தைகளின் மனநிலையை விவரிக்கும் புகைப்படங்கள்!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குழப்பத்திற்கு மத்தியில், அந்த நாட்டில் ஏவுகணை தாக்குதலுக்கு நடுவே சிக்கி தவித்து கொண்டிருக்கும் குழந்தைகளின் பரிதமான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உலகை உலுக்கிவருகிறது.
உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் ஷெல் மற்றும் ஏவுகணை தாக்குதலில் பெரியவர்களே சிக்கி விழிபிதுங்கி கொண்டிருக்கும் போது, போரை பற்றிய எந்தவொரு முழுமையான தெளிவான பிரிதல்கள் இல்லாத குழந்தைகளின் நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது.
அந்தவகையில் இந்த செய்தி குறிப்பில், உக்ரைனில் இர்பான் நகரில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலின் போது தனது மகளை தூக்கி கொண்டு ஓடும் தந்தை புகைப்படம் முதல் உக்ரைனில் இருந்து போலந்து நாட்டிற்கு ரஷ்ய தாக்குதலில் இருந்து தப்பித்து ஓடும் குழந்தை தொடர்பான புகைப்படம் வரை இடம்பெற்றுள்ளது.
இந்த புகைப்படங்கள் அனைத்தும் பிரபலமான ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1. உக்ரைனில் இர்பான் நகரில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலின் போது தனது மகளை தூக்கி கொண்டு ஓடும் தந்தை புகைப்படம்(மார்ச்06)
2. போலந்தில் உள்ள அகதிகளின் தற்காலிக தங்குமிடமான Przemysl பகுதிக்கு வந்தடைந்துள்ள உக்ரைனிய குழந்தை தனது கூடாரத்திலிருந்து எட்டிப்பார்க்கும் புகைப்படம்.(மார்ச்06)
3. தந்தையிடம் இருந்து பிரிந்து, உக்ரைனின் தலைநகர் கீவ்வின் மத்திய ரயில் நிலையத்தில் இருந்து லிவிவ் நகரத்துக்கு செல்லும் குழந்தையின் புகைப்படம்(மார்ச்03)
4. தலைநகர் கீவ்யில் ரஷ்யா தாக்குதல் தொடர்ந்தால் ஓக்மடெட் குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நோயாளிகள் அந்த மருத்துவமனையின் ஹால்வே அடித்தளத்திற்கு மாற்றப்பட்டபோது எடுத்த புகைப்படம் (பிப்ரவரி 28)
5. ரஷ்ய தாக்குதலால் உக்ரைனின் ஆதரவற்ற குழந்தைகள் மையத்தில் இருந்து போலந்தின் ராவா மசோவிக்காவிற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒஸ்ஸாவிற்கு மாற்றப்பட்டன. அப்போது அவனது காலை உணவின் போது சிறுவன் ஒருவன் பீதியில் கண்ணீர் வடித்தது தொடர்பான புகைப்படம் (மார்ச்05)
6.ரஷ்ய தாக்குதலில் இருந்து தப்பியோடிய பெண் ஒருவர், போலந்தின் ப்ரெஸ்மிஸ்லில் ஏற்படுத்தபட்டுள்ள தற்காலிக முகாமில் குழந்தை ஒன்றை கட்டிஅணைக்கும் புகைப்படம்(பிப்ரவரி 28)
7. உக்ரைனில் இருந்து அகதியாக வெளியேறும் குழந்தை ஒன்று Nyugati நிலையத்தில் போக்குவரத்துக்கு நெரிசலில் காத்திருக்கும் போது உலகிற்கான காதல் செய்கையை காட்டும் புகைப்படம்(பிப்ரவரி 28)
8. ரஷ்ய தாக்குதலால் உக்ரைனின் ஆதரவற்ற குழந்தைகள் மையத்தில் இருந்து போலந்தின் ராவா மசோவிக்காவிற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒஸ்ஸாவிற்கு மாற்றப்பட்ட குழந்தைகள் தங்களது காலை உணவை உட்கொள்ளும் புகைப்படம்(மார்ச்05)
9. உக்ரைனின் கெய்வில் பகுதியில் ரஷ்ய படையின் வான்தாக்குதல் குறித்த சைரன் ஒலிகள் எழுந்ததால் பெரினாட்டல் மையத்தின் அடித்தளத்தில் குழந்தைகள் தஞ்சமடைந்தது தொடர்பான புகைப்படம் (மார்ச்02)
10. போலந்தில் உள்ள அகதிகளின் தற்காலிக தங்குமிடமான Przemysl பகுதிக்கு வந்தடைந்துள்ள உக்ரைனிய குழந்தை ஒன்று பழச்சாறு உட்பட சில தின்பண்டங்களை எடுத்துச்செல்வது தொடர்பான புகைப்படம் (மார்ச்06)
11. உக்ரைனில் இருந்து போலந்தின் மெடிகாவில் உள்ள எல்லைச் சோதனைச் சாவடியில் நோக்கி தப்பி ஓடும் குழந்தைகளின் புகைப்படம் (மார்ச்07)
12. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிலிருந்து தப்பியோடி போலந்தின் ப்ரெஸ்மிஸ் பகுதியில் உள்ள தற்காலிக முகாமில் கூடாரத்திற்கு வெளியே நிற்கும் குழந்தையின் கவலைதோய்ந்த புகைப்படம் (மார்ச்01)
13. உக்ரைனின் கெய்வில் பகுதியில் ரஷ்ய படையின் வான்தாக்குதல் குறித்த சைரன் ஒலிகள் எழுந்ததால் பெரினாட்டல் மையத்தின் அடித்தளத்தில் பிறந்த குழந்தையுடன் தஞ்சம் புகுந்த ஆண்(மார்ச்02)
மேலும் சில புகைப்படங்கள் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளது..








