கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு புடின் இராணுவத்தால் புதைக்கப்பட்ட 448 அப்பாவிகள்
ரஷ்ய எல்லைக்கு அருகே, கிழக்கு உக்ரைனில் கிராமம் ஒன்றில் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு புதைக்கப்பட்ட 448 அப்பாவி உக்ரேனிய மக்கள் தொடர்பில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
மொத்தமாக கொன்றுவிட்டு
கடந்த 2022 அக்டோபர் மாதம் நடந்த இந்த கொடுஞ்செயல் தொடர்பில் உக்ரைன் கர்னல் செர்ஹி போல்வினோவ் மற்றும் அவரது காவல்துறை நடத்திய விசாரணையில் அதிரவைக்கும் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கிழக்கு உக்ரைனில் Izium நகருக்கு வெளியே பைன் மரக் காட்டில் இந்த சடலங்கள் அனைத்தும் புதைக்கப்பட்டிருந்தது. கர்னல் செர்ஹி போல்வினோவ் அப்பகுதிக்கு விசாரணைக்கு என செல்லும் போது, அப்பகுதியில் எழுந்த வாடை அவரால் மறக்க முடியாது என்றே குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் படை முன்னேறியதும் அங்கிருந்த ரஷ்ய இராணுவம், அப்பகுதி அப்பாவி மக்களை மொத்தமாக கொன்றுவிட்டு தப்பியுள்ளது. சடலங்கள் அனைத்தும் கைகால்கள் உடைந்த நிலையிலும், கைகள் கட்டப்பட்டும், தீக்காயங்களுடனும்,
கத்தி மற்றும் துப்பாக்கியால் காயப்படுத்தப்பட்டும், கழுத்தில் கயிறுகளுடனும், உடல் சிதைக்கப்பட்டும் கண்டெடுக்கப்பட்டன. பெண்கள், சிறார்கள் என மொத்தம் 448 உடல்கள் அழுகிய நிலையில், அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளது.

போர்க்குற்ற சம்பவம்
உடல்கள் கொடூரமாக சிதைக்கப்பட்டிருந்ததால், அவர்களை அடையாளம் காணும் பணி சிக்கலாக இருந்துள்ளது. இருப்பினும், இதுவரை 405 பேர்களின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.
22 பேர்களின் சடலங்கள் இன்னும் டிஎன்ஏ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது, இன்னொரு 21 பேரின் அடையாளங்கள் ஏமாற்றமளிக்கும் வகையில் சிக்கலாக உள்ளது.

1990களில் யூகோஸ்லாவியா உடைந்ததிலிருந்து ஐரோப்பா கண்ட மிகப்பெரிய ஒற்றை போர்க்குற்ற சம்பவம் இதுவென்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கர்னல் செர்ஹி போல்வினோவ் என்பவரின் 1,000 பேர்கள் கொண்ட வலுவான அணி கடந்த 3 ஆண்டுகளாக இந்த வழக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 71 பேர் ரஷ்யப் படைகளால் இயக்கப்படும் பீரங்கிகள், ஏவுகணைகள் அல்லது மோட்டார்களால் கொல்லப்பட்டுள்ளனர். இன்னொரு 41 பேர்கள் ரஷ்ய விமானத் தாக்குதலின் விளைவாக கொல்லப்பட்டுள்ளனர். இந்த 448 பேர்களில் மூன்று வயது நிகிதாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        