ரஷ்ய படை மீது உக்ரைன் பதிலடி தாக்குதல்! குறிவைக்கப்பட்ட 448வது ஏவுகணைப் படை
ரஷ்ய ஏவுகணைப் படை மீது உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தி இருப்பதாக அறிவித்துள்ளது.
உக்ரைனின் பதிலடி தாக்குதல்
உக்ரைனின் சுமி நகரில் ரஷ்யாவின் பயங்கர ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததோடு 119க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த பேரழிவு தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக உக்ரைன் ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது.
டெலிகிராமில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உக்ரைன் படைகள் ரஷ்ய ராணுவத்தின் 448வது ஏவுகணைப் படையின் தளத்தை குறிவைத்து தாக்கியுள்ளனர்.
அத்துடன் அதில், "ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களின் 448வது ஏவுகணைப் படையின் தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது, மேலும் வெடிமருந்துகளின் இரண்டாம் நிலையில் வெடிப்பு காணப்பட்டது," என்று அந்த அறிக்கை விவரிக்கிறது.
தாக்குதலின் முழு சேதத்தின் அளவு தற்போது விசாரணையில் உள்ளது என்று உக்ரைன் ராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |