உக்ரைன் போரால் உலக நாடுகள் மத்தியில் சீனாவிற்கு அதிகரிக்கும் நெருக்கடி
உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான போரை இன்று ஐந்தாவது நாளாக நடத்திவருகிறது. இந்த நிலையில் இந்த உக்ரைன் நெருக்கடி சீனாவிற்கு உலக நாடுகளின் உறவில் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த சமயத்தில், சீனாவில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் மூலம் ரஷ்யாவிற்கு சீனாவிற்கும் இடையிலான ராஜதந்திர நெருங்கிய உறவுகள் வலுப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறியப்பட்டு இருந்தன.
இதனை இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் முக்கிய உலக தலைவர்கள் பெரும்பாலானோர் பங்கேற்காத நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் முதல் ஆளாக பங்கேற்று சீனாவுடன் ஆன ரஷ்யாவின் உறவு வலுப்பட்டு இருப்பதை உலக நாடுகளுக்கு உறுதிப்படுத்தினார்.
போர் பதற்றம் அதிகரித்து வந்த சூழ்நிலையில் இந்த சந்திப்பால், ரஷ்யாவும் சீனாவும் இணைந்து புதிய உலக ஒழுங்கை ஏற்படுத்த முயல்வதாக அமெரிக்கா இரண்டு அரசாங்கங்களையும் குற்றம் சாட்டியது.
இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்ய ஆதரவாளர்களின் பகுதிகளை உக்ரைனை பிடித்துவைத்து இருப்பதாக கூறி உக்ரைன் மீது தனது போரை ரஷ்யா அறிவித்தது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் எழுந்துள்ள பதற்றம் தணிக்கப்பட வேண்டும் என்று சீனா பொதுவெளி அறிவிப்புகளில் அறிவித்து வந்தாலும், இந்த பதற்றத்தால் உலகநாடுகளுடனான சீனாவின் உறவை பெரும் சவாலாக மாற்றியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் போரை ஆதரிப்பதை சீனா விரும்பவில்லை என்றாலும், ரஷ்யா உடனான ராணுவ உறவையும் வலுப்படுத்த நினைக்கிறது.
மேலும் ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பை சீனா ஆதரிப்பதாக கருத்தப்பட்டால் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக உறவில் பின்னடைவு ஏற்படலாம் எனவும் கருதுகிறது.
சீனாவுடனான அமெரிக்க உறவை எடுத்துக்கொண்டால், அது எப்போதும் தீ எரிவதற்கு முந்தைய கனல் புகையாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
உதாரணமாக சீனாவின் உயர்மட்ட ராஜதந்திர அதிகாரி லியு சியோமிங்கின் ட்வீட்டில் "சீனா ஒருபோதும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை அல்லது பினாமி போர்களில் ஈடுபடவில்லை என பதிவிட்டு அமெரிக்காவை மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் நம்பர் ஒன் வர்த்தக நண்பனாக சீனா, கிளிவுடனான நல்ல உறவை பேணிக்காக்கவும் முயல்கிறது.
ஆனால் உக்ரைனில் எல்லையில் ராணுவத்தை அனுப்பும் நாட்டுடன் நெருங்கிய உறவில் இணைந்து இருக்கும் போது உக்ரைன் உடனான அந்த உறவை தக்கவைப்பதில் கடினம் ஏற்பட்டுள்ளது.
மேலும் உக்ரைன் மீதான படையெடுப்பைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பில்
நடத்தப்பட்டபோது அதை சீனா புறக்கணித்தது உக்ரைனுடனான சீனாவின் உறவை மேலும் சிக்கலாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.