ரஷ்ய உக்ரைன் போரில் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு., 352 பேர் மரணம்
உக்ரைனில் ரஷ்ய இராணுவத்தின் தாக்குதலில் இதுவரை 16 குழந்தைகள் உட்பட 352 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் போரால் குறைந்தது 16 உக்ரைன் குழந்தைகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கீவில், ஆரம்பப் பள்ளி மாணவி பொலினா ரஷ்ய நாசகாரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மரியுபோல் நகரில் வான்வழித் தாக்குதலில் ஆறு வயது சிறுவனும் கொல்லப்பட்டான். தெற்கு உக்ரேனிய நகரமான கெர்சனில், பிறந்து சில வாரங்களே ஆன ஆன் குழைந்தை மட்டும் அவரது சகோதரி 6 வயது சோஃபி சுட்டுக்கொல்லப்பட்டனர்.
நாடு முழுவதும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மேலும் 45 குழந்தைகள் காயமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதுவரை, குறைந்தது 352 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பொதுமக்கள் மட்டும் குறைந்தது 136 பேர் என கூறப்படுகிறது
ரஷ்யா உக்ரைன் மீது தெர்மோபரிக் ஆயுதத்தை (வெற்றிட வெடிகுண்டு) பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. அவ்வகை குண்டுகளில் ஒன்று உக்ரேனிய இராணுவ தளத்தில் பயன்படுத்தப்பட்டது, அதில் 70 உக்ரைனிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இது ஜெனீவா மாநாட்டிற்கு எதிரானது என்று அமெரிக்காவுக்கான உக்ரைனிய தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா (Oksana Markarova) கூறினார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய விசாரணையையும் திறந்துள்ளது.