மூன்று படுகொலை... நூலிழையில் உயிர் தப்பிய உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர்: அம்பலமான ரஷ்யா

Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Arbin Aug 09, 2022 07:51 AM GMT
Report

      * உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த பின்னர், முதன்மை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு பல அடுக்கு பாதுகாப்பு

      * மூன்று முக்கிய அதிகாரிகளை கொல்ல திட்டமிட்ட ரஷ்ய உளவுத்துறையின் திட்டம் அம்பலம்

      உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அதன் இராணுவ புலனாய்வு அமைப்பின் தலைவரை கொல்ல திட்டமிட்ட ரஷ்ய உளவுத்துறையில் பணிபுரியும் இருவரை உக்ரைன் கைது செய்துள்ளது.

      குறித்த குழுவானது மூன்று படுகொலைகளுக்கு திட்டமிட்டதாகவும், தற்போது உக்ரைன் பாதுகாப்பு அமைப்பினால் சாமர்த்தியமாக முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

      பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ், பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கிய புலனாய்வு இயக்குநரகத்தின் தலைவர் கைரிலோ புடானோவ் மற்றும் ஒரு முக்கிய உக்ரேனிய சமூக ஆர்வலர் ஆகிய மூவரையும் ரஷ்ய உளவுத்துறை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளது.

      ஆனால், குறித்த திட்டம் முறியடிக்கப்பட்டு, ரஷ்யாவின் பங்கு அம்பலமான நிலையில், இது தொடர்பில் ரஷ்யவிடம் இருந்து எந்த பதிலும் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.

      கைதானவர்களில் ஒருவர் கிழக்கு லுஹான்ஸ்க் பகுதியில் குடியிருப்பவர் எனவும் இன்னொருவர் தலைநகர் கீவ் பகுதியை சேர்ந்தவர் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படுகொலைக்கும் 150,000 டொலர் வெகுமதி அளிக்கப்படும் என ரஷ்ய உளவுத்துறை வாக்குறுதி அளித்துள்ளதாகவும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

      மூன்று படுகொலை... நூலிழையில் உயிர் தப்பிய உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர்: அம்பலமான ரஷ்யா | Ukraine Defence Minister Russia Plot Assassinate

      லுஹான்ஸ்க் பகுதியைச் சேர்ந்த அந்த கொலைகாரன் பெலாரஸிலிருந்து உக்ரைனுக்குள் நுழைந்துள்ளார் எனவும் வடமேற்கு உக்ரைனில் உள்ள கோவெல் நகரில் கீவ் குடியிருப்பாளருடன் கைது செய்யப்பட்டார் எனவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      பிப்ரவரி 24ல் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த பின்னர், முதன்மை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு உக்ரைன் அரசு பல அடுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது.

      மட்டுமின்றி, தலைநகர் கீவில் அரசாங்க மாவட்டம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டும் வருகிறது.

      மூன்று படுகொலை... நூலிழையில் உயிர் தப்பிய உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர்: அம்பலமான ரஷ்யா | Ukraine Defence Minister Russia Plot Assassinate

      36ம் ஆண்டு நினைவஞ்சலி
      அகாலமரணம்
      மரண அறிவித்தல்

      மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

      12 Sep, 2026
      2ம் ஆண்டு நினைவஞ்சலி

      கரவெட்டி, அக்கரைப்பற்று

      19 Sep, 2024
      மரண அறிவித்தல்
      மரண அறிவித்தல்

      நெல்லியடி, India, Toronto, Canada

      16 Sep, 2026
      மரண அறிவித்தல்

      கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

      09 Sep, 2026
      மரண அறிவித்தல்

      சரவணை, கோண்டாவில் மேற்கு

      14 Sep, 2026
      2ம் ஆண்டு நினைவஞ்சலி

      வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

      18 Sep, 2024
      6ம் ஆண்டு நினைவஞ்சலி

      மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

      24 Sep, 2020
      5ம் ஆண்டு நினைவஞ்சலி

      கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

      11 Oct, 2021
      11ம் ஆண்டு நினைவஞ்சலி

      மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

      18 Sep, 2015
      மரண அறிவித்தல்

      காரைநகர் தங்கோடை, Brampton, Canada

      14 Sep, 2026
      மரண அறிவித்தல்

      இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

      11 Sep, 2026
      10ம் ஆண்டு நினைவஞ்சலி

      காங்கேசன்துறை, கனடா, Canada

      15 Sep, 2016
      31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

      மண்டைதீவு, London, United Kingdom

      17 Aug, 2026
      7ம் ஆண்டு நினைவஞ்சலி
      மரண அறிவித்தல்
      (+44) 20 3137 6284
      UK
      (+41) 315 282 633
      Switzerland
      (+1) 437 887 2534
      Canada
      (+33) 182 888 604
      France
      (+49) 231 2240 1053
      Germany
      (+1) 929 588 7806
      US
      (+61) 272 018 726
      Australia
      lankasri@lankasri.com
      Email US