ரஷ்யாவின் மிகப்பெரிய ட்ரோன் தொழிற்சாலை: 20,000 வடகொரியர்கள்.. அழிக்கப்போகும் உக்ரைன்?
ட்ரம்ப் பச்சைக்கொடி காட்டியவுடன், ரஷ்யாவுக்கு பேரிடியை தரப்போகும் தாக்குதலை உக்ரைன் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டோமாஹாக் ஏவுகணை
ரஷ்யாவின் அலபுகாவில் சுமார் 20,000 வட கொரியர்கள் ட்ரோன்கள் உருவாக்க பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது ரஷ்யாவின் மிகப்பெரிய ட்ரோன் தொழிற்சாலை என்பதால் அதனை அழிக்க உக்ரைன் முனைந்துள்ளது. இதற்காக நீண்ட தூர டோமாஹாக் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த உள்ளது.
இந்த வாரம் கீவிற்கு இந்த ஏவுகணைகளை வழங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுமதி வழங்குவார் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்த ட்ரம்புடன் விவாதிக்க உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்காவுக்கு செல்கிறார்.
இதற்கிடையில், டோமாஹாக் பயன்படுத்தலின் பேரழிவு விளைவுகள் குறித்து ட்ரம்பை எச்சரிக்க, ரஷ்யா ஒரு தீவிரமான பின் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |