உக்ரைன் நடத்திய திடீர் அதிரடி தாக்குதல்: கடலில் மூழ்கிய ரஷ்யாவின் கப்பல்: வீடியோ
ரஷ்யாவின் ஏவுகணை கப்பலை உக்ரைன் திடீர் தாக்குதல் நடத்தி மூழ்கடித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர்
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் இரண்டாவது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. இருப்பினும் இரு நாடுகளுக்கு இடையிலான போர் தாக்குதல் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் இவானோவெட்ஸ்(Ivanovets) என்ற ஏவுகணை கப்பலை உக்ரைனின் முக்கிய புலனாய்வு இயக்குநரகம் திடீர் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.
❗️Ukraine's Main Directorate of Intelligence has destroyed the "Ivanovets" missile boat
— NEXTA (@nexta_tv) February 1, 2024
On the night of January 31 to February 1, the boat was on the roadstead in the occupied Crimea. The approximate value of the lost ship is $60-70 million.
Preliminary information says that… pic.twitter.com/dXFsedP2Qn
ரஷ்யாவுக்கு பெரும் இழப்பு
கடலில் மூழ்கிய ரஷ்யாவின் போர் கப்பல் ஜனவரி 31ம் திகதிக்கும் பிப்ரவரி 1ம் திகதிக்கும் இடைப்பட்ட இரவில் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவின் கடல் பகுதியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவானோவெட்ஸ்(Ivanovets) மூழ்கடிக்கப்பட்டதன் மூலம் ரஷ்யாவிற்கு 60 முதல் 70 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
முதல்நிலை தகவலின் படி, இவானோவெட்ஸ்(Ivanovets) கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பிறகு ரஷ்யா தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டதாகவும், ஆனால் அது வெற்றிகரமாக முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Ukraine destroyed the russian Ivanovets missile boat, Ivanovets missile boat value upto $60-70 million, Russian boat sank near occupied Crimea, ukriane-russia war