ரஷ்ய ஹெலிகாப்டர்களை தவிடுபொடியாக்கிய உக்ரைன் பீரங்கிகள்! வெளியான ஆதாரம்
உக்ரைனின் கெர்சன் விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய ஹெலிகாப்டர்களை உக்ரைன் படையினர் தாக்கி அழித்துள்ளனர்.
உக்ரைன் மீது தொடர்ந்து 21வது படையெடுத்து வரும் ரஷ்யா, நேற்று அந்நாட்டின் கெர்சன் நகரத்தை முழுமையாக கைப்பற்றியதாக அறிவித்தது.
இந்நிலையில், ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் நகரின் விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர்களை உக்ரைன் படையினர் பீரங்கிகளால் தாக்கி அழித்துள்ளனர்.
உக்ரைன் தாக்குதலில் ரஷய் ஹெலிகாப்டர்கள் தீப்பற்றி எரிந்து நாசமான செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
மார்ச் 15ம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் ரஷ்யா 3-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் உட்பட ராணுவ வாகனங்களை இழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.